தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் மிகவும் பிரபலமான பாடகர்களாக வலம் வந்தவர்கள் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் கே ஜே ஜேசுதாஸ்தான். அடுத்த வரிசையில் மனோ மலேசியா வாசுதேவன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரும் இருந்தனர். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான பாடல்களை எஸ்பிபி மற்றும் கேஜே ஜேசுதாஸ்தான் நிறைய பாடியிருக்கின்றனர்.
எஸ்பிபி சித்ரா, எஸ்பிபி எஸ் ஜானகி பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள்தான். அதே போல் கேஜே ஜேசுதாஸ் உடன் சித்ரா, எஸ் ஜானகி நிறைய பாடல்களை பாடியிருக்கின்றனர். இவர்கள் பாடிய அனைத்து காதல் பாடல்களுமே இன்றைக்கும் தமிழ் சினிமா இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக தான் இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் இசைத்துறையிலும் பிரபலமானவர் பாடகர் கே ஜே ஜேசுதாஸ். அதே போல் பாடகி எஸ் ஜானகியும் பல்வேறு மொழிகளில் பாடியிருக்கிறார். பாடகர் கேஜே ஜேசுதாஸூம் பாடகி எஸ் ஜானகியும் இணைந்து பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாடகர் கே ஜே ஜேசுதாஸ், பாடகி எஸ் ஜானகியை பார்த்து நான் ரொம்பவும் பொறாமைப்பட்டு இருக்கிறேன் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் கடந்த 1961ம் ஆண்டிலிருந்து பல மொழிகளில் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன்.
நான் இதுவரை 60 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன். 70 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன் என்றுதான் மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் நான் எத்தனை பாட்டு பாடி இருக்கிறேன் என்று நான் கணக்கெடுத்தது கிடையாது. ஆனால் ஜானகி அம்மா எந்த பாட்டு பாடினாலும், அது எந்த படம் என்ன பாட்டு எப்போ பாடினோம் என்கிற எல்லாத்தையும் ஒரு சின்ன டைரியில் எழுதி வெச்சிருப்பாங்க.
அதை பார்த்து எனக்கு அவங்க மேல ரொம்பவும் பொறாமையா இருக்கும். இப்படி டைரி போட்டு எல்லாத்தையும் இத்தனை வருஷமா எழுதி வெச்சிருக்காங்களேன்னு தோணும். அவங்களை மாதிரியே நானும் அது மாதிரி டைரியில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்த 2 டைரியும் எப்படியோ காணாமல் போய் விட்டது என்று பாடகர் கேஜே ஜேசுதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





