- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்ப்பு கிடைத்தால் அந்த ரோலில் தீபிகா படுகோனேவுடன் நடிப்பேன் - தனுஷ் பட நடிகை கிருத்தி...

வாய்ப்பு கிடைத்தால் அந்த ரோலில் தீபிகா படுகோனேவுடன் நடிப்பேன் – தனுஷ் பட நடிகை கிருத்தி சனோன் இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி சனோன். தெலுங்கு சினிமாவில்தான் இவர் முதலில் அறிமுகமானார். நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக 1 – நேனோகாடினே என்ற படத்தில் கிருத்தி சனோன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். நாயகியாக நடிகை கிருத்தி சனோன் நடித்த இந்த படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது.

தெலுங்கில் நல்ல அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து தில்வாலே என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அந்த படமும் இந்தி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதால் கிருத்தி சனோன் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நடிகையாக இமேஜ் உயர்ந்தது. அதன்பிறகு இந்தியில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த இந்தி படம் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் கதாநாயகியாக கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரூ. 170 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது. அதனால் தமிழிலும் அவர் நடிக்க அதிக பட வாய்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில் நடிகை கிருத்தி சனோன் ஒரு நேர்காணலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருக்கிறார். அவர் அப்போது பேசியது இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் நடிகை கிருத்தி சனோனிடம் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டது. ஒரு படத்தில் லெஸ்பியன் ரோலில் நடித்தால் எந்த நடிகைக்கு ஜோடியாக நடிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த நடிகை கிருத்தி சனோன், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தீபிகா படுகோனேவுடன் நடிப்பேன். ஏனென்றால் அவர்தான் அழகாக இருப்பார். என்னையும் சரியாக வழி நடத்துவார். இருவரும் ஒரே உயரம் கொண்டவர்கள். உடல் அமைப்பும் ஒன்றுதான் என்று வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.

லெஸ்பியன் கேரக்டரில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவி இருந்தால் அது பிரச்னை இல்லை. அதிலும் பாலிவுட்டில் உச்ச நட்சத்திர நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனேவுடன் லெஸ்பியன் கேரக்டரில் நடிக்க விரும்புவதாக கிருத்தி சனோன் சொன்னது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னார், இதில் என்ன தவறு என்றும் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்