- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு ஜாதகம் எழுதியதே நான்தான்… அவரிடம் நீங்க சூப்பர் ஸ்டாரா வருவீங்கன்னு முதலில் சொன்னதே நான்தான்...

ரஜினிக்கு ஜாதகம் எழுதியதே நான்தான்… அவரிடம் நீங்க சூப்பர் ஸ்டாரா வருவீங்கன்னு முதலில் சொன்னதே நான்தான் – பிரபல நடிகர் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

திரைப்படங்களில் கோணங்கித்தனம் செய்து வித்யாசமான சேஷ்டைகள் செய்துகாட்டி ரசிகர்களை சிரிக்க வைப்பவர்கள் காமெடி நடிகர்கள்தான். அவர்களிடம் என்ன பெரிய திறமை இருக்கப் போகிறது என்றுதான் பலரும் கருதுவார்கள். ஆனால் ஒரு சிலரை பற்றிய பின்னணி தகவல்களை அறியும்போது அது பெரிய ஆச்சரியத்தை நமக்கு தந்து விடுகிறது.

உதாரணமாக நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பெரும்பாலான படங்களில் காமெடி செய்திருப்பார். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் ஒரு ஜோதிடர் என்பது பலரும் அறியாத விஷயம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றவர்கள் கூட அவரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, முள்ளும் மலரும் படத்துக்காக நாங்க அவுட்டோர் போயிருந்தோம். நானும் ரஜினியும் ஒரே ரூமில் பக்கத்து பக்கத்து பெட்ல படுத்து தூங்கினோம். ரஜினி காலையில் எழுந்தவுடன் ராகவேந்தர் சுவாமியை பாட்டு பாடி வழிபடுவார்.

ஏன்சார் காலங்கார்த்தாலே, தூக்கம் கெடுது என்றேன். அப்படி எல்லாம் சொல்லாதீங்க. இன்னிக்கு அவரால்தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன் என்று ரஜினி சொன்னார். எனக்கு ராகவேந்திரர் மேல ரொம்ப பக்தி உண்டு. நீங்களும் கும்பிடுங்க என்றார். அப்புறம் நானும் ராகவேந்திரர் சுவாமியை கும்பிட ஆரம்பித்து விட்டேன். அவர் சொன்னதால்தான்.

- Advertisement -

அப்புறம் ஒருநாள் எனக்கு நீங்க ஜாதகம் போட்டு தரணும் என்றார். அதனால் அடுத்த ஷூட்டிங் போகும் போது நான் புத்தகமெல்லாம் கொண்டு போய் அவருக்கு ஜாதகம் போட்டுக் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டது, நான் எல்லா மொழிகளிலும் நடிப்பேனா, குறிப்பாக இந்தியில் நான் நடிப்பேனா என்றுதான் முதலில் கேட்டார்.

நான் அவரிடம் சொன்னது, உங்களுக்கு தமிழ்தான். இந்தியில் நீங்க நடிச்சாலும் கண்டினியூ பண்ண முடியாது. இந்தி தெலுங்கு கன்னடம் என எந்த மொழியில் நடித்தாலும் நீங்கள் தமிழில்தான் சூப்பர் ஸ்டாராக வர முடியும். இன்னும் 2 3 படங்களில் உங்களது ரேட் ஏறிடும் என்றும் சொன்னேன். இப்போது ரஜினி கையில் இருப்பது நான் போட்டுக்கொடுத்த ஜாதகம்தான் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்