- Advertisement -
Homeபொழுதுபோக்குகலவையான விமர்சனம் பெற்ற அவதார் 3 - ஆனால் வசூல் மட்டும் பின்னி பெடலெடுக்குதே…? ...

கலவையான விமர்சனம் பெற்ற அவதார் 3 – ஆனால் வசூல் மட்டும் பின்னி பெடலெடுக்குதே…? 5 நாட்கள் வசூலில் திகைத்துப் போன இந்திய சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

எப்போதுமே பிரமாண்டமான ஹாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவரது படங்களுக்கு ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. கதை கதைக்களத்தில் எப்போதுமே ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களை அசத்தி விடுகிறார்.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது அவதார் படம். இந்த முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பெரிய அளவில் வசூலித்து பெரிய அளவில் புகழ்பெற்றது.

- Advertisement -

அவதார் படத்தின் முதல் பாகம் அபார வெற்றியை தொடர்ந்து தி வே ஆஃப் வாட்டர் என்ற அவதார் படத்தின் 2ம் பாகம் வெளியானது. அந்த படத்திற்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. இந்த படமும் அவதார் முதல் பாகத்தை போலவே பெரிய அளவில் வசூலை குவித்தது.

அவதார் 1 மற்றும் அவதார் 2 என இரண்டு பாகங்களுக்கும் பிரமாண்ட வெற்றியை ரசிகர்கள் கொடுத்த நிலையில், தொடர்ந்து டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பஃயர் அண்ட் ஆஷ் என்ற டைட்டிலில் அவதார் படத்தின் 3ம் பாகத்தை டைரக்ட் செய்திருக்கிறார். உலகம் முழுவதும் இந்த படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது.

- Advertisement -

அவதார் பஃயர் அண்ட் ஏஷ் தியேட்டரில் பார்த்தால் நிச்சயமாக விஷூவல் எபெக்ட் அனுபவம் கிடைக்கும் என்ற நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள அவதார் 3ம் பாகம் படத்தின் திரைகதைக்கு கலவையான விமர்சனம் தான் ரசிகர்களின் மத்தியில் கிடைத்துள்ளது.

இந்த படம் அவதார் படத்தின் முந்தைய 2 பாகங்களை போல ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் அவதார் 3 படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 4000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.

- Advertisement -

சற்று முன்