தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சிம்பு. அஷ்டவதானி என்று அழைக்கப்பட்ட இயக்குனர் டி ராஜேந்தரின் மகன். அப்பாவை போலவே சிம்புவும் கலைத்துறையில் பல விஷயங்களிலும் திறமை மிக்கவராக இருந்தும் அவரால் தொடர்ந்து சினிமாவில் பெரிய வெற்றிகளை தர முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அவர் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்கிக் கொள்வதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் பாரபட்சமாக நடந்துக்கொள்வதும்தான் என்ற குற்றச்சாட்டுகள் கோலிவுட்டில் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக சிம்புவின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றங்கள் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடித்த தக்லைஃப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலேசியா சென்ற நடிகர் சிம்பு, அங்கு கார் ரேஸில் பிஸியாக இருந்த நடிகர் அஜீத்குமாரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார். அதை தொடர்ந்து கோவில்பட்டியில் நடந்த அரசன் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் சிம்பு கலந்துக்கொண்டார். அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசன் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா யோகேஸ்வரி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நடிகர் சிம்பு நடிக்கும் படம் ஒன்றை இயக்க விரும்பியிருக்கிறார். இதற்காக சமீபத்தில் சிம்புவை சந்தித்திருக்கிறார். சிம்பு தரப்பில் இருந்து பாசிட்டிவ் ஆன ரிசல்ட் இதுவரை இல்லை.
அதே போல் விஜய் தனுஷ் படங்களுக்கு பிறகு இயக்குனர் எச் வினோத் சிம்பு படம் இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக எச் வினோத் தரப்பில் இருந்தும் சிம்புவுக்கு தகவல் வந்திருக்கிறது. ஆனால் ஏஆர் முருகதாஸ் தொடர்தோல்வி படங்களை தருவதால் சிம்பு அவரிடம் போதிய ஆர்வம் காட்டாத நிலையில், இயக்குனர் எச் வினோத்துக்கு எஸ்டிஆர் தனது அடுத்த படத்தை இயக்க வாய்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.





