- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் மறுபடி போகும்போது கம்ருதீன் அங்கே இருந்தா அது ரொம்பவும் கெட்ட நேரம் - சாண்ட்ராவின்...

நான் மறுபடி போகும்போது கம்ருதீன் அங்கே இருந்தா அது ரொம்பவும் கெட்ட நேரம் – சாண்ட்ராவின் கணவர் பிரஜின் ஆத்திரம்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இப்போது 90 நாட்களை நெருங்கி விட்டது. இன்னும் 2 வாரங்களில் இந்த சீசன் நிறைவடைய உள்ளது. இப்போது 9 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இதில் ஒருவர் டைட்டில் வின்னராகவும் ஒருவர் ரன்னராகவும் வெற்றி பெற இருக்கின்றனர்.

இந்த சீசனில் 3 வாரங்கள் கழிந்த நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அமித் பார்கவ் திவ்யா கணேஷ் பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அதில் பிரஜின் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேறிய நிலையில் சாண்ட்ரா திவ்யா கணேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது டிக்கெட் டூ பினாலே போட்டிகள் நடந்து முடிவடைந்துள்ளன. இந்த டிக்கெட் டூ பினலேவுக்காக கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட போட்டிகளில் அதிக புள்ளிகளில் வெற்றிப் பெற்ற போட்டியாளர் சாண்ட்ரா, இறுதி போட்டிக்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிக்கெட் டூ பினாலேவில் 8வது போட்டியாக நேற்றிரவு கார் டாஸ்க் நடந்தது. 9 போட்டியாளர்களும் காருக்குள் அமர்ந்து இருந்தனர். அப்போது காருக்குள் இருந்த சாண்ட்ராவை மிகவும் தரக்குறைவாக பேசி கம்ருதீன் அசிங்கப்படுத்தினார். மிகவும் வரம்பு மீறிய வார்த்தைகளால் சாண்ட்ராவை கம்ருதீன் விமர்சித்தது பார்வையாளர்களுக்கே கோபத்தை ஏற்படுத்தியது

- Advertisement -

காருக்குள் இருந்த இது சக போட்டியாளர்களையம் கம்ருதீனின் வார்த்தைகள் எரிச்சலடைய வைத்தது. இப்படி பேச வேண்டாம் என சபரி கானா வினோத் எச்சரித்தும் கம்ருதீன் கேட்கவில்லை. அருகில் இருந்த பார்வதி கம்ருதீனை தூண்டி விட்டுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை கம்ருதீன், பார்வதி இருவரும் சேர்ந்து வெளியே பிடித்து வலுக்கட்டாயமாக தள்ளி விட்டனர். பார்வதி, சாண்ட்ராவை உதைத்து வெளியே தள்ளினார்.

இதுகுறித்து சாண்ட்ராவின் கணவர் பிரஜின் கூறியதாவது, வீட்டுக்குள் நடந்த இந்த சம்பவத்தை எல்லாம் பிக்பாஸ் பார்த்திருப்பார். மக்களும் பார்த்திருக்கின்றனர். அவர்கள் 2 பேருக்கும் ரெட்கார்டு தருவது குறித்து பிக்பாஸ் தான் முடிவு செய்வார். ஆனால் நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் போது கம்ருதீன் அங்கே இருந்தால், அது அவருக்கு பேட் டைம். இல்லேன்னா நல்ல நேரம். பிக்பாஸ் வீட்டுக்குள் நான் போனால் என்ன செய்ய வேண்டுமோ அதை நான் கண்டிப்பாக செய்வேன் என்று பிரஜின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்