நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்து முடித்த நிலையில் அடுத்து அவர் நடிக்கும் 173 படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பது இன்று காலை உறுதியாகி விட்டது. ரஜினியின் 173வது படத்தை இயக்க வாய்ப்புள்ள இயக்குனர்கள் லிஸ்ட்டில் ராம்குமார் பாலகிருஷ்ணன் எச் வினோத் அஸ்வத் மாரிமுத்து நித்திலன் சுவாமிநான் பெயர்கள்தான் முதலில் இருந்தன.
ஆனால் இந்த லிஸ்ட்டிலேயே இல்லாத சிபி சக்ரவர்த்தி இப்போது தலைவர் 173 படத்தின் இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த 4 இயக்குனர்கள் சொன்ன கதையில் ரஜினிக்கு ஏதோ ஒருவிதமான நெருடலும் திருப்தி அடையாத நிலையில்தான் இருந்துள்ளார். அதனால் தனது 173வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் சிரமமான நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில்தான் சிபி சக்ரவர்த்தி இதுகுறித்து தெரிந்து இருக்கிறார். உடனடியாக தனது கதை விவாத குழுவுடன் அமர்ந்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். ஆனால் சிபி சக்ரவர்த்தியை தவிர மற்ற யாருக்கும் இது ரஜினிக்காக எழுதப்படும் கதை என்பதே தெரியாது என்ற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.
இதையடுத்து சிபிசக்ரவர்த்தியிடம் நேரில் ரஜினி கதை கேட்டிருக்கிறார். ரஜினி 4 மணி நேரம் கதை கேட்ட நிலையில், மிகவும் உற்சாகமாகி சிபி சக்ரவர்த்தியை கமலிடம் அனுப்பி வைத்திருக்கிறார். இப்படிதான் இந்த படத்தின் வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதையை ரஜினிக்காக 2 வாரங்களில் எழுதி முடித்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி.
இந்த படம் வழக்கமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிடையாது. குடும்ப சென்டிமென்ட் கதையில் உருவான பேமிலி டிராமாதான். இதுபோன்ற ஒரு கதையில் இப்போதைய சூழலில் நடிக்க ரஜினி மிகவும் ஆசைப்படுகிறார். அதனால் இந்த கதை ரொம்பவும் அவருக்கு பிடித்து போய் விட்டது.
வருகிற ஜனவரி 3 5 அல்லது 7ம் தேதி இந்த படத்தின் அறிவிப்பை வெளியிடுங்கள் என்று ராஜ்கமல் நிறுவனத்துக்கு ரஜினியே அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி இன்று இந்த வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் ஏற்கனவே ஒருமுறை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ரஜினி படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்து அது நடக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.





