- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி, எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்க - முதல்வர் விஜயின் மகன்...

என் அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி, எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்க – முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் அரசியல் களத்தில் பரபரப்பான ஒரு ஆளுமையாக மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்து 108 இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலிக்கு வந்துவிட்டார்.

இதற்கிடையே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களது பிள்ளைகள் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா ஆகியோரும் விஜயை விட்டு பிரிந்து அம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர். முதல்வர் விஜய் நீலாங்கரை பங்களாவில் தனியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞசய் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த ஜூலை 31ம் தேதி வெளிவர இருந்த சிக்மா படம், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனதால் சிக்மா படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது முதல் படம் சிக்மா படத்தை இயக்கிய அனுபவம் குறித்தம் தனது பெற்றோர் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அப்போது ஜேசன் சஞ்சய் கூறியதாவது, என்னுடைய அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி. எல்லாவற்றையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

- Advertisement -

அம்மாவை ஏமாற்றிவிட்டு தனியாக வெளியே செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் எப்படியாவது அவரிடம் நான் மாட்டிக்கொள்வேன். ஒரு முறை வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவில் யாருக்கும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டேன். இரவு முழுவதும் வெளியில் சுற்றிவிட்டு மறுநாள் காலையில் 11 மணி அளவில் தான் வீட்டுக்கு திரும்பினேன்.

என் செல்போனையும் சுவிட்ச்ஆஃப் செய்து வைத்து விட்டேன். நான் காணாமல் போய்விட்டதாக நினைத்து அவர்கள் பயந்து போய் விட்டார்கள். போலீசில் புகார் அளிக்கவும் தயாராக இருந்தார்கள். நான் காலையில் வீட்டுக்கு திரும்பிய போது என்னை நன்றாகவே வெளுத்து வாங்கி விட்டார்கள் என்று ஜேசன் சஞ்சய் ஜாலியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்