- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி கேமியோ ரோல்களில் நடிக்கவே மாட்டேன், அந்த படத்தில் அவருக்காக மட்டுமே நடித்தேன், இனி அது...

இனி கேமியோ ரோல்களில் நடிக்கவே மாட்டேன், அந்த படத்தில் அவருக்காக மட்டுமே நடித்தேன், இனி அது நடக்காது – நடிகர் விஜய் சேதுபதி தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. பிறகு இயக்குனர் சீனு ராமசாமி அவரை தென்மேற்கு பருவ மழை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு மத்திய அரசின் சிறந்த துணை நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியா படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மகாராஜா தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம் டாக் என்ற படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இப்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து நடித்து வருகிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த பாக்கெட் நாவல் என்ற படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, இனிமேல் எந்த படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். ஜெயிலர் 2 படத்தில் நடிக்க காரணம் ரஜினி சார் தான். அவருடன் இணைந்து நடிக்கலாம் என்பதால் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டேன். மற்றபடி இனி கெஸ்ட் ரோலில் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை. இதற்கு காரணம், சில படங்களில் நான் சில நிமிடங்களில் நடித்தாலும் என் புகைப்படத்தை பெரிதாக போஸ்டரில் போடுகிறார்கள்.

அது என் அடுத்தடுத்த திரைப்படங்களை மிகவும் பாதிக்கிறது. அதனால் இனிமேல் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது உறுதியாகி விட்டது. ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதேபோல் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் மாஸ்டர் படத்தில் விஜய்க்க வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்