- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி… நீடிக்கும் தாமதத்தால் நொந்துப்போன படக்குழு - அதிரடி...

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி… நீடிக்கும் தாமதத்தால் நொந்துப்போன படக்குழு – அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூருரை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் 2 தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரியின் ரீமேக் படம்தான் என்பதும் உறுதியாகி விட்டது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்னும் இந்த படத்துக்கு தணிக்கைக்குழு தரப்பில் இருந்து சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த டிசம்பர் 19ம் தேதி இந்த படம் தணிக்கைக்குழு பார்வைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் சில திருத்தங்களை கூறினர்.

அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர், படத்தில் சண்டை காட்சிகளில் இருந்த சில வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் டிசம்பர் 24ம் தேதி ஜனநாயகன் படத்தை தணிக்கைக் குழு பார்வைக்கு அனுப்பினர். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைக்குழு தரப்பில் இருந்து சான்றிதழ் கிடைக்கவில்லை.

- Advertisement -

மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் களத்தில் நிற்கும் நடிகர் விஜயின் படம் என்பதால் அரசியல் அழுத்தங்களால் தான் இந்த படத்துக்கு சான்றிதழ் தராமல் தணிக்கைக்குழு தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சான்றிதழ் வராத நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் பலத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தணிக்கைக்குழு தரப்பில் இழுத்தடிக்கப்படுவதால் வரும் பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா என்பதே பெரிய சந்தேகமாக மாறியுள்ளது. இதையடுத்து ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் பட நிறுவனம் வழக்கு தொடரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்