- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு டாஸ்க்கை தந்து பழி தீர்த்துக்கொண்டாரா பிக்பாஸ்? - கொஞ்சம் பழைய சாதமும் கொடுத்திருக்கலாமே...

இப்படி ஒரு டாஸ்க்கை தந்து பழி தீர்த்துக்கொண்டாரா பிக்பாஸ்? – கொஞ்சம் பழைய சாதமும் கொடுத்திருக்கலாமே என்று கேட்ட கானா வினோத்!

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 இப்போது நிறைவுகட்டத்தை வேகமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. 13 வாரங்களை கடந்து 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் இருந்து வரும் நிலையில் கடைசியாக ரெட்கார்டு காட்டி பார்வதி கம்ருதீன் வெளியேறிய நிலையில் அடுத்ததாக சுபிக்சா எவிக்‌ஷனில் வெளியே சென்றார்.

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அரோரா சாண்ட்ரா திவ்யா கணேஷ் கானா வினோத் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரிநாதன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இதில் அரோரா டிக்கெட் டூ பினாலே போட்டியில் ஜெயித்து நேரடியாக பைனலுக்குள் நுழைந்து விட்டார். இன்னும் 5 பேரில் யார் யார் பைனலுக்கு வருவார்கள் என்பது வரும் நாட்களில் உறுதியாகி விடும்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களை கன்பெக்சன் ரூமுக்குள் பிக்பாஸ் அழைத்தார். வழக்கமாக வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் 2 பேரை எலிமினேட் செய்ய சொல்லும் பிக்பாஸ், நேற்று வித்யாசமாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளவர்களில் ஒருவர் அல்லது 2 பேரை சேவ் செய்யுமாறு கூறினார்.

ஆனால் அதற்கு முக்கிய நிபந்தனையாக 2 பச்சை மிளகாய் அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். ஒரு மிளகாய் கண்டிப்பாக சாப்பிட்டு ஒரு போட்டியாளரை சேவ் செய்ய வேண்டும். 2வது மிளகாயை போட்டியாளர் அவராக முன்வந்து சாப்பிட்டால் இன்னொரு போட்டியாளரையும் சேவ் செய்யலாம். ஆனால் 2வது மிளகாய் சாப்பிடுவது போட்டியாளரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

பச்சை மிளகாயை கடித்த போது காரத்துக்கு குடிக்க தண்ணீரும் அங்கு இருந்தது. இதன்படி சபரிநாதன் விக்கல்ஸ் விக்ரம் அரோரா சாண்ட்ரா திவ்யா கணேஷ் ஆகியோர் 2 பச்சை மிளகாய்களை சாப்பிட்டு அவர்களுக்கு பிடித்தமான 2 பேரை சேவ் செய்தனர். ஆனால் கானா வினோத் மட்டும் ஒரே மிளகாய் சாப்பிட்டு சபரியை சேவ் செய்தார்.

ஆனால் பச்சை மிளகாய்களை சாப்பிட்ட போட்டியாளர்கள் ஆ ஊ உஸ் என வீட்டுக்குள் அலறிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு காரத்தை போக்க வாழைப்பழம் தயிர் பால் மற்றும் யோகட் உள்ளிட்டவற்றை பிக்பாஸ் அனுப்பி வைத்தார். அப்போது கானா வினோத், பச்சை மிளகாய் வெச்ச நீங்க கொஞ்சம் பழைய சாதமும் வெச்சிருந்தால் ரொம்ப சூப்பராக இருந்திருக்கும் பிக்பாஸ் என்று கோரிக்கை விடுத்து கலாய்த்தார்.

- Advertisement -

சற்று முன்