- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராணி கேரக்டரில் நயன்தாரா… தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டாரா? - உண்மையில்...

மகாராணி கேரக்டரில் நயன்தாரா… தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டாரா? – உண்மையில் நடந்தது என்ன?

- Advertisement -

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அகண்டா 2. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது தெலுங்கு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் விரைவில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கோபிசந்த் மலினேனி டைரக்ட் செய்கிறார்.

ஏற்கனவே நடிகர் பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி என்ற படத்தை இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம் மன்னர் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மகாராணி கேரக்டரில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே நடிகர் பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா ஜெய் சிம்ஹா ராம ராஜ்யம் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்போது நடிகர் பாலகிருஷ்ணாவுடன் 111வது படத்தில் மீண்டும் நயன்தாரா இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் அகண்டா 2 படம் எதிர்பார்த்த வசூலை வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. அதனால் இந்த படத்தின் பட்ஜெட்டை குறைத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நயன்தாரா இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நடிகை நயன்தாரா நீக்கப்பட்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது, ஆனால் இது குறித்து படக்குழு வெளியிட்டு மறுத்துள்ளது.

நயன்தாரா இந்த படத்தில் இருந்து மாற்றப்பட்டதாக பரவிய தகவல் அது வதந்தி தான். படத்தின் கதை தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்படவில்லை. அவர்தான் இந்த படத்தில் ஏற்கனவே கமிட் ஆன கேரக்டரில் நடிக்கிறார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்