- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் கூட என்கிட்ட மறுத்து பேசலே… உங்க இஷ்டப்படி எல்லாம் நான் படம் எடுக்க முடியாது...

விஜயகாந்த் கூட என்கிட்ட மறுத்து பேசலே… உங்க இஷ்டப்படி எல்லாம் நான் படம் எடுக்க முடியாது – நடிகர் விஜயிடம் சீறிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் ஆரம்பத்தில் காதல் படங்களில்தான் அதிகமாக நடித்தார். அதன்பிறகு திருமலை படத்தில் இருந்து தான் ஆக்சன் ஹீரோவாக மாறினார். அதுவரை அவரது படங்கள் எல்லாமே காதலை மையப்படுத்திய பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள்தான் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைகளாக இருந்தன.

இதில் இயக்குனர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம்தான் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை தமிழ் சினிமாவில் தந்தது என்று உறுதியாக சொல்லலாம். அதுவரை விஜய்க்கு அப்படி ஒரு சிறந்த படம் அமையவில்லை. பெண் ரசிகைகளின் கூட்டம் இதன்பிறகுதான் விஜய் பக்கம் திரும்பியது.

- Advertisement -

பூவே உனக்காக படத்தில் விஜய், அவர் காதலித்த பெண் வேறு ஒரு இளைஞரை காதலிக்கும் நிலையில் அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரவும் திருமணம் செய்துக்கொள்ளவும் முடியாத நிலையில் தவிக்கின்றனர். அவர்கள் இருவரது குடும்பத்தில் உள்ள சண்டையே இதற்கு காரணம் என்கிற நிலையில் அந்த குடும்பங்களை ஒற்றுமையாக்க விஜய் பாடுபடுவதே இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க கமிட் ஆன படம்தான் உன்னை நினைத்து. விஜய் லைலா நடித்த 2 பாடல்களும் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் விஜய் தொடர்ந்து நடிக்கவில்லை. அதன்பிறகு நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. இரண்டு பாட்டும் ஷூட் பண்ணினோம். ஆனால் விஜய்க்கு கிளைமாக்ஸ்சில் உடன்பாடு இல்லை. சாரி சார் எனக்கு கிளைமாக்ஸ்சில் ஈடுபாடு வரலைன்னு சொன்னார். இல்ல விஜய் உங்களுக்கு பிடிக்கலைன்னு நான் கிளைமாக்ஸ் மாத்தினா படம் முழுவதும் இது விஜய்க்கு பிடிக்குமா? பிடிக்காதா என்று டைரக்ட் பண்ற மாதிரி இருக்கும்.

அது என்னோட கேரியருக்கு செட் ஆகாது. இதுவரைக்கும் என் படத்தில் நான் என்ன நினைச்சேனோ அதைத்தான் எடுத்து இருக்கேன். கடைசி படம் கூட விஜயகாந்த் சாரை வெச்சு எடுத்தேன். அவர் ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லலே. உங்க பேச்சைக் கேட்டு நான் கிளைமாக்ஸ் மாத்தினா என்னால சகஜமாக எடுக்க முடியாது. அதனால இதோட நிறுத்திக்கலாம். நான் வேற ஹீரோவை வைத்து இந்த படத்தை எடுத்துக்கிறேன் என்று சொல்லிட்டேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்