- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் பிப்ரவரியில் சூர்யா விக்ரம் படங்கள் மோதுகிறதா? அப்போது விஜய் படமும் போட்டிக்கு வந்துவிடுமா? -...

வரும் பிப்ரவரியில் சூர்யா விக்ரம் படங்கள் மோதுகிறதா? அப்போது விஜய் படமும் போட்டிக்கு வந்துவிடுமா? – ரசிகர்களை அப்செட் செய்த லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் சியான் விக்ரம் நடிப்பு தரமாக இருந்தது. பல காட்சிகளில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

இந்த சூழலில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த ஆண்டில் வெளியான ரெட்ரோ படம் வணிக ரீதியான வெற்றியை கொடுத்தாலும் சிங்கம் படம் போல ஒரு வெற்றி கொண்டாட்ட படமாக இது அமையவில்லை. அதன்பிறகு கருப்பு படத்தில் நடித்த முடித்த சூர்யா இப்போது சூர்யா 46 சூர்யா 47 படங்களில் நடித்து வருகிறார். இதில் தனது 47வது படத்தில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா கமிட் ஆன படம் துருவ நட்சத்திரம். பிறகு அவர் அந்த படத்தில் நடிக்க விருப்பமின்றி வெளியேறிய நிலையில் சியான் விக்ரம் அந்த படத்தில் நடித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான துருவ நட்சத்திரம் படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்போது துருவ நட்சத்திரம் திரைக்கு வருவது ஒருவழியாக உறுதியாகி விட்டது. அந்த படம் சார்ந்த நிதி பிரச்னைகள் எல்லாமே சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 19ம் தேதி அல்லது 20ம் தேதி 2 நாட்களில் ஒரு தேதியில் துருவ நட்சத்திரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதே நேரத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடிகர் சூர்யா நடித்த கருப்பு படமும் ரிலீஸ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் ஜனநாயகன் பராசக்தி படங்கள் காரணமாக பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் வருகிற பிப்ரவரி 19ம் தேதி கருப்பு ரிலீஸாக உள்ளது.

அதனால் நடிகர்கள் சூர்யா விக்ரம் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் களத்தில் மோதுகின்றன. அதே நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போகும் பட்சத்தில் அந்த படமும் பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸாகும் ஒரு சூழல் உருவானால் நிச்சயமாக துருவ நட்சத்திரம் கருப்பு ஆகிய படங்கள் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகவே அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்