- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை திரைக்கு வருமா? வராதா? கடைசி நேர குழப்பத்தில் சிக்கிய கார்த்தி படம் -...

நாளை திரைக்கு வருமா? வராதா? கடைசி நேர குழப்பத்தில் சிக்கிய கார்த்தி படம் – வா வாத்தியார் தியேட்டருக்கு வர்றதே பெரும்பாடா இருக்குதே?

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படம் ரிலீஸானது. இந்த படத்துக்கு பிறகு கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் கார்த்தி நடித்த படம் எதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அவர் வா வாத்தியார் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ஒரு படமும் ஆண்டு முழுவதும் திரைக்கு வராததால் கார்த்தி ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்டுயோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான படம் வா வாத்தியார். இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருக்கிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தை தயாரிப்பதற்காக அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் இருந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 10.35 கோடி ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர் தாஸ்க்கு தர வேண்டும்.

கடன் கொடுத்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் தன்னை திவால் ஆனவராக அறிவித்த நிலையில் அவரது சொத்துக்களை இப்போது சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வரை நடிகர் கார்த்தி நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்க கோரி சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது.

- Advertisement -

மேலும் அந்த படத்தின் மீதான உரிமையை ஏலம் விடவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் சார்பில் 3.75 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மீதி கடன் தொகையை செலுத்தும் பட்சத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் 3.75 கோடி ரூபாய் மட்டுமே தந்த நிலையில் இன்னும் 18 கோடி வரை இந்த படத்துக்காக ஸ்டுடியோ கிரீன் சார்பில் கோர்ட்டில் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை அந்த தொகையை அவர்கள் கோர்ட்டில் செலுத்தியதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நாளை படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடைசி நேரத்தில் இந்த படம் திரைக்கு வருமா வராதா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. வா வாத்தியார் என டைட்டில் வைத்த படம் தியேட்டருக்கு வருவதே பெரும்பாடாக உள்ளது என்று கார்த்தி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்