- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ரசிகர்களை ரவுடிகள்… குண்டர்கள் என்று ஆவேசமாக வசைபாடிய இயக்குனர் சுதா கொங்கரா -...

விஜய் ரசிகர்களை ரவுடிகள்… குண்டர்கள் என்று ஆவேசமாக வசைபாடிய இயக்குனர் சுதா கொங்கரா – பழியை தூக்கி அவங்க மேல போடறீங்களா என்று கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

கடந்த 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் 2 நாட்களில் 51 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அளிவித்துள்ளது.

இதற்கிடையே படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சந்தித்த நிலையில் அது வெற்றிப் படம் தந்ததற்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அதை தடுக்கும் விதமாக விஜய் ரசிகர்களால் அந்த படத்துக்கு அவதூறு பரப்ப்படுவதாக சுதா கொங்கராவே கூறும் நிலையில் இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பு முரண்பட்டதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஆங்கில டிவி சேனல் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, பராசக்தி படத்திற்கு எதிராக தவறான விமர்சனங்கள் பரப்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மோசமான அவதூறு பரப்பப்படுகிறது. இணையத்தில் ஒருவர் பராசக்தி படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவது விஷயம் இல்லை.

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னிப்பு சான்றிதழ் வாங்குங்கள். அப்போதுதான் படம் ஓடும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இது ஆரோக்கியமான சினிமா சூழல் இல்லை. ஒரு படத்துக்கு எதிராக பெயர் தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான முறையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரியான ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்துக்கு எதிராக நான் போராட வேண்டி இருக்கிறது.

- Advertisement -

படக்குழுவாக நாங்கள் இதையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் யோசியுங்கள். அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தியேட்டரில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது. இப்படி செய்வதெல்லாம் போட்டி அல்ல. இதை போல்தான் கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இடையூறு செய்தார்கள் என சுதா கொங்கரா பேசியிருந்தார்.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, படம் ஓடாவிட்டால் பழியை தூக்கி சோசியல் மீடியாவினர் அல்லது விமர்சகர்கள் மீது போடுவது தமிழ் சினிமாக்காரர்களின் வழக்கம். படத்தில் நாம் என்ன தவறு செய்தோம் என்று சுய பரிசோதனை செய்ய மாட்டார்கள். இறுதிச்சுற்று சூரரைப் போற்று படங்களை வரவேற்றபோது இனித்த மக்கள் இப்போது கசக்கிறார்கள் என்று ப்ளு சட்டை மாறன் பதிவு செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்