எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வித்யாசமான கதைக்களத்தில் உருவான படங்களுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் திரில்லர் கதைக்களத்தில் உருவான படங்கள் என்றால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான். அந்த வகையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜெயித்திருக்கின்றன.
அதனால் தான் இயக்குனர்கள் சுந்தர் சி ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் தங்களது வழக்கமான காதல் ஆக்சன் படங்களில் இருந்து அவ்வப்போது விலகி திரில்லர் ஹாரர் படங்களை தந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அதனால்தான் அரண்மனை சீரிஸ் படங்களும் காஞ்சனா சீரிஸ் படங்களும் தமிழ் சினிமாவில் தொடர்கின்றன.
அந்த வரிசையில் நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த இயக்குனர் ஏஆர்கே ஷரவன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படத்துக்கு அபரிமிதமான வெற்றி கிடைத்தது.
பேண்டஸி காமெடி படமாக உருவான மரகத நாணயம் படத்தை ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் கதை என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை என்னும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை ஒரு கும்பல் கைப்பற்ற முயற்சிக்கும். அதை காமெடியான கதைக்களத்தில் கூறியிருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனமும் பாராட்டையும் பெற்றது.
கடைசியில் மரகத நாணயத்தை அந்த கும்பல் கைப்பற்றினார்களா இல்லையா என்பதுதான் கதை. விறுவிறுப்பான கதைக்களத்தில் படம் ரசிகர்களை ஆர்வமாக பார்க்க வைத்தது. இந்த படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பை தொடர்ந்து மரகத நாணயம் 2ம் பாகம் உருவாகும் என்று படத்தின் இயக்குனர் ஏஆர்கே ஷரவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். முதல் பாகத்தை தயாரித்த ஆக்சிஸ் பேக்டரி நிறுவனம்தான் மரகத நாணயம் 2ம் பாகத்தையும் தயாரிக்கிறது.
இதில் ஆதி நிக்கி கல்யாணி சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மரகத நாணயம் முதல் பாகத்தில் நடித்த பிறகு ஆதி நிக்கி கல்யாணி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மரகத நாணயம் 2 படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படமும் நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.





