தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். நல்ல திறமையான கலைஞராக தன்னை வெளிப்படுத்தியதால் இன்று நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார்.
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் நடிப்புதான் முக்கியம் என்ற கோணத்தில் ஹீரோவாகவும் அவ்வப்போது வில்லன் கேமியோ ரோல்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த 2 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோ தொகுப்பாளராகவும் அவர் வெற்றிக்கரமாக பணிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய அரசியல் சூழலில் சினிமா நடிகர்கள் அதிகளவில் அரசியல் களத்துக்கு வந்து விடுகின்றனர். எப்போது யார் அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதிப்பார்கள் என்பதே தெரியவில்லை. அல்லது எந்த அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வார்கள் என்பதும் புதிராக உள்ளது. மார்க்கெட் இழந்த பல நடிகர் நடிகைகள் இப்போது இருப்பது அரசியல் கட்சிகளில்தான்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தனது பிறந்த நாளை மதுரையில் கொண்டாடினர். இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் மதுரையில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்த நாளை விஜய் சேதுபதி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது மதுரை தேனி தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் பலர் அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி கடந்த பல மாதங்களாகவே ஒரு விஷயத்தை திட்டமிட்டு வருகிறார். ஆனால் கமிட் ஆன படங்களில் அவர் பிஸியாக உள்ளதால் அது இன்னும் நடக்காமல் தள்ளிப் போயுள்ளது.
அதாவது நடிகர் விஜய் சேதுபதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து ஒரு பெரிய மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி அவர்கள் மத்தியில் பேசவும், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றவும் ஆசைப்படுகிறார். தனது படங்களின் வெற்றிக்கு ரசிகர்களே காரணம் என்பதால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். மக்கள் செல்வனுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா, அரசியல் கட்சி எதுவும் துவங்கப் போகிறாரா என்று பலரும் இதுகுறித்து கமெண்ட் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.





