- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகர்கள் மம்முட்டி பிருத்வி ராஜ் படங்களில் நடிக்க மறுத்த நடிகை பாவனா - இதுதான்...

மலையாள நடிகர்கள் மம்முட்டி பிருத்வி ராஜ் படங்களில் நடிக்க மறுத்த நடிகை பாவனா – இதுதான் காரணமா? – அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. தமிழில் வெயில் தீபாவளி கூடல் நகர் சித்திரம் பேசுதடி ஜெயம் கொண்டான் ஆரியா அசல் உள்ளிட்ட படங்களில் நடிகை பாவனா நடித்திருக்கிறார். நல்ல அழகான இளமையான நடிகையாக அவர் நடித்த படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் அவர் பல ஆண்டு காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நடிகை பாவனா திரில்லர் படம் அனோமி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மீண்டும் பாவனா சினிமாவில் ரீ என்ட்ரி தந்து திரையில் விரைவில் வர உள்ளார். அனோமி படத்தின் பிரமோஷனுக்காக நடிகை பாவனா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து நீண்ட காலமாக விலகி இருப்பது குறித்தும் அதற்கான பின்னணியில் உள்ள தனிப்பட்ட காரணங்கள் குறித்தும் நடிகை பாவனா இப்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவனா கூறியதாவது, இப்போது எல்லாம் நான் எதையும் திட்டமிடுவதில்லை.

திடீரென்று மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்போதும் கூட மலையாள சினிமாவைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை அழைத்து ஒரு படம் செய்யச் சொன்னார்கள். ஸ்கிரிப்டையாவது கேட்கச் சொன்னார்கள். அதில் பிரித்விராஜ் ஜெயசூர்யா மம்முட்டி போன்றவர்களின் படங்களும் இருந்தன. ஆனால் நான் நடிக்க மாட்டேன் என்று நோ சொல்லிவிட்டேன்.

- Advertisement -

அந்த படங்களில் நடிக்காமல் நான் ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்று நீங்கள் கேட்டால் எனக்கு உண்மையில் பதில் இல்லை. அந்த நேரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. அதனால் அந்த படங்களில் நடிக்க சம்மதம் சொல்லவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் நடிகை பாவனா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இப்போது நடிகை பாவனா ரியாஸ் மராத் என்பவரது இயக்கத்தில் அனோமி என்ற படத்தில் ரகுமானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஷெபின் பென்சன் திரிஷ்யா ரகுநாத் மற்றும் பினு பப்பு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அனோமி படம் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை பாவனா தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என்று மலையாள சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்