- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் உருவான டிமாண்டி காலனி 3 படம் ரிலீஸ் எப்போது?...

அஜய் ஞானமுத்து – அருள்நிதி கூட்டணியில் உருவான டிமாண்டி காலனி 3 படம் ரிலீஸ் எப்போது? சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்பேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. வழக்கமாக காதல் பேமிலி டிராமா ஆக்சன் என ஒரே மாதிரியான படங்களை பார்த்து அலுத்து போகும் ரசிகர்களுக்கு திரில்லர் படங்கள் நல்ல உற்சாகத்தை தருகின்றன.

ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற திரில்லர் படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்புவது இல்லை. குறிப்பாக சிறியவர்கள் முதியவர்கள் இல்லத்தரசிகள் போன்றவர்கள் இந்த படங்களை விரும்பாத நிலையிலும் சுந்தர் சி ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அவர்களையும் கவரும் விதமாக காட்சிகளுடன் திரில்லர் படங்களை கொடுத்து வெற்றி பெறுகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸ் திரில்லர் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அரண்மனை இதுவரை 4 பாகங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக அரண்மனை 5 படம் எடுக்க சுந்தர் சி தயாராகி இருக்கிறார். அதே போல் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் வரிசையில் அடுத்த காஞ்சனா 4 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி. திரில்லர் படமான இது மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ரமேஷ் திலக் யோகிபாபு எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

டிமாண்டி காலனி படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழிந்து மீண்டும் டிமாண்டி காலனி 2 படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் அருள் நிதி பிரியா பவானி சங்கர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இதில் வரும் சில காட்சிகள் மிரட்டலாக இருந்தன.

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி படம் உருவாகி வருகிறது. ஏறக்குறைய 70 சதவீத படப்பிடிப்புகள் நடந்து முடிந்து விட்டன. இதில் பெரும்பாலான காட்சிகள் வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷ்யா என்ற பகுதியில் ஷெட்கள் அமைத்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. வருகிற மே மாதம் 21ம் தேதி டிமாண்டி காலனி 3 படம் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

சற்று முன்