தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இன்னும் அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களின் ரசனைக்குரிய சிறந்த படங்களாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது படங்கள் யதார்த்தமான கதைக்களத்தில் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களாக இருந்ததே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
புது வசந்தம் பூவே உனக்காக சூரிய வம்சம் உன்னை நினைத்து நான் பேச நினைப்பதெல்லாம் வானத்தை போல பிரியமான தோழி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என விக்ரமன் இயக்கத்தில் வெளியான படங்கள் பலவும் வெள்ளிவிழா கண்ட வெற்றிப் படங்களாக இருந்தன. நடிகர் விஜய்க்கு பூவே உனக்காக படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படம் கூட 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யவில்லை. இது ஒரு வெட்கக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும். கன்னட படங்கள் காந்தாரா கேஜிஎஃப் படங்கள் வந்து அது ரெக்கார்டு பிரேக்கா 1000 கோடி ரூபாய் வசூல் அடிச்சிட்டு இருக்குது.
இன்னும் ஒரு தமிழ் படம் கூட 1000 கோடி ரூபாய் வசூல் அச்சீவ் பண்ணவில்லை. அதுவே நமக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. எதுக்காக இந்தியில் இருந்து பாபி தியோலை கொண்டு வர்றீங்க? இந்தியில் இருந்து ஒரு ஆக்டர் மலையாளத்தில் இருந்து ஒரு ஆக்டர் தெலுங்கில் இருந்து ஒரு ஆக்டர் என்று இது எல்லாம் தேவையே இல்லை.
கண்டென்ட் இருந்தா அந்த படம் ஜெயிக்கும். அதுதான் உண்மை. பாகுபலி படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் பிற மொழிகளை சேர்ந்த பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. தமிழில் இருந்து சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நாசர் போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். அவர்களும் தமிழில் பெரிய நடிகர்கள்தான்.
நடிகர் சத்யராஜ் 1980களில் பெரிய மாஸ் ஹீரோ. ஆனால் இப்போது இல்லை என்பதுதான் உண்மை. அந்த மாதிரிதான் அவர் நடித்தார். ஆனால் அந்த படம் எவ்வளவு பெரிய ரெக்கார்டு பிரேக் செய்தது? பாகுபலி தெலுங்கில் மட்டுமில்லை. தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் கண்டென்ட் நன்றாக இருந்தால் பெரிய ஆர்ட்டிஸ்ட் எல்லாம் தேவை இல்லை. படத்தை கரெக்ட்டாக எடுத்து ஹிட் பண்ணலாம் என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





