- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார் இயக்குனர், இதுதான் பச்சை துரோகம், மஞ்சள் வீரன் படத்தில்...

என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார் இயக்குனர், இதுதான் பச்சை துரோகம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசன் ஆவேசம் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

முன்பெல்லாம் பெரிய பெரிய சாதனைகளை செய்துதான் மக்கள் மத்தியில் பலரும் பிரபலம் அடைந்து வந்தனர். அரசியல், சினிமா, விளையாட்டு என முக்கிய துறைகளில் பெரிய அளவில் சாதிப்பவர்கள், மக்கள் மத்தியில் புகழ் பெற்றனர் ஆனால் இப்போது யூடியூப், ரீல்ஸ் செய்து பலரும் மக்கள் மத்தியில் முக்கிய நபர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களை செலிபிரட்டி என்றும் கௌரவமாக அழைக்கின்றனர்.

பிரதான ரோடுகளில் அதிக வேகத்தில் செல்போனில் பேசியபடி பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூடிப்பில் வீடியோவாக வெளியிட்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் அதிகபட்ச வேகத்தில் பைக் ஓட்டி, சாகசத்தைக் காட்டி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தனர். அதனால் இவருக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனம் கிடைத்தது.

- Advertisement -

ஆனால் அதிகபட்ச வேகத்தில் பைக் ஓட்டி, டீன் ஏஜ் வயதினரை தூண்டி விடுவதாக சர்ச்சையும், விமர்சனமும் டிடிஎப் வாசன் மீது எழுந்த நிலையில், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். மேலும் சில மாதங்களுக்கு முன் திருப்பதி கோவிலில், அங்கு வரிசையில் காத்திருந்த பக்தர்களை கலாய்க்கும் விதமாக வீடியோ எடுத்து, ஆந்திரா போலீசார் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு சிக்கலில் சிக்கியவர்.

யூடியூப் மற்றும் சர்ச்சைகளின் மூலம் பிரபலமான டிடிஎப் வாசனை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. மஞ்சள் வீரன் படப்பிடிப்பும் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து கதாநாயகனாக நடிக்க இருந்த டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் செல்அம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நேரடியாக அறிவித்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இதற்கு பதிலளித்து டிடிஎப் வாசன், தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் செல்அம் கூறவே இல்லை. நான் தொடர்பு கொண்டாலும் அவர் என்னிடம் பேச தயாராக இல்லை. என்னுடைய போனை எடுக்க மறுக்கிறார். என்னிடம் சொல்லி இருந்தால் நானே அதற்கு ஒத்துக்கொண்டு மஞ்சள் வீரன் படத்தில் இருந்து விலகி இருப்பேன்.

ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலேயே நான் ஷூட்டிங் வரவில்லை என்று கூறுவது மிகப்பெரிய தவறு. அண்ணன், அண்ணன் என சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்திக் கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு பச்சை துரோகத்தை நான் பார்த்ததே இல்லை, என்று அந்த வீடியோவில் டிடிஎப் வாசன் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்