தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளில் சொந்தமாக வீடுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா போன்றவர்களுக்கு துபாயில் சொந்தமாக வீடுகளும் மியூசிக் ஸ்டுடியோக்களும் உள்ளன.
அதே போல் நடிகர் அஜீத்குமாருக்கு துபாயில் சொந்தமாக 2 பங்களா வீடுகள் உள்ளது. நடிகை நயன்தாராவும் சமீபத்தில் துபாயில் வீடு வாங்கியிருக்கிறார். நடிகர் ரவி மோகன், நடிகர் சூர்யா போன்றவர்கள் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் சிம்புவும் இணைந்து விட்டார்.
நடிகர் அஜீத்குமார் வசிக்கும் பகுதியில் அவர் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடு வாங்க சிம்பு முயற்சித்த நிலையில் வீடு அங்கு கிடைக்கவில்லை. அங்கு இருந்து 1 கி.மீ தொலைவில் சிம்பு ஒரு வீடு வாங்க முடிவு ஆகிவிட்டது. இந்த வில்லா வின் விலை 57 கோடி ரூபாய் என்கிற நிலையில், அதில் 40 சதவீதம் முன்பணமாக தர வேண்டும்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவர் அந்த முன்தொகையை தர முன்வந்துள்ளார். விரைவில் அவரது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதும் முடிவாகி உள்ளது. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வில்லா பங்களாக நடிகர் சிம்புவின் சொந்த வீடாக மாறிவிடும்.
நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக துபாயில் மாதக்கணக்கில் இருந்து விடுகிறார். 3 மாதங்கள் 6 மாதங்கள் என அவர் துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வந்த நிலையில் இப்போது அவர் தனது சொந்த வீட்டிலேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் ஏற்கனவே துபாய் வாசியாக உள்ள அவர் இனி சொந்த வீடு இருப்பதால் நிரந்தர துபாய் வாசியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சென்னையில் சொந்தமாக வீடுகள் இருந்தாலும் துபாய் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மும்பை போன்ற தொழில் நகரங்களில் நடிகர் நடிகைகள் குடியேற விரும்பி சொந்தமாக வீடுகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்புவும் துபாய் வாசியாக மாறி இருக்கிறார். இனி அவரிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் துபாயில் நடக்கும் கதைக்களத்தில் கதை சொன்னால் உடனே சிம்பு ஓகே சொல்ல அதிக வாய்ப்புள்ளது.





