- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தால் வந்த நெருக்கடி… சிக்கி தவிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் - தியேட்டர் அதிபர்களும்...

விஜய் படத்தால் வந்த நெருக்கடி… சிக்கி தவிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் – தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் எடுத்த திடீர் முடிவு!

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம்தான் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ளது. இதுதான் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இதில் விஜய் சம்பளமே ரூ. 250 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவது தடைபட்டுள்ளது. கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இந்த பிரச்னை குறித்து கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

- Advertisement -

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா யு/ஏ சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தடை செய்தது. மேலும் இந்த வழக்கை தனி நீதிபதியே மீண்டும் விசாரணை நடத்தி பிறகு உத்தரவிட வேண்டும் என்றும் நேற்று தீர்ப்பளித்தது. அதனால் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இடையில் சென்ற தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதா, அல்லது இந்த வழக்கில் இருந்து பின் வாங்குவதா அல்லது மறு ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்புதா என்ற குழப்பத்தில் தயாரிப்பு நிறுவனம் இருந்து வருகிறது.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன். அதனால் வருகிற சட்டசபை தேர்தலுக்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. தேர்தல் நடந்து முடிந்த பிறகுதான் படம் ரிலீஸாக வாய்ப்புள்ளது. இதனால் இன்னும் 4 மாதங்களுக்கு மேல் படம் ரிலீஸ் தள்ளிப் போகலாம்.

அதே நேரத்தில் வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் பல லட்சம் பல கோடி ரூபாய் என வட்டிக்கு கடன் வாங்கி தான் ஜனநாயகன் படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இப்போது அவர்கள் பணத்தை திருப்பி கொடுங்க என்று கேட்காவிட்டாலும் வட்டியை காரணமாக காட்டி ஜனநாயகன் படத்தின் விலையை முன்பை விட பாதி வரை குறைக்க சொல்வார்கள் என்கிற சூழல் உருவாகி உள்ளது. அதனால் விஜய் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் பலத்த இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.

- Advertisement -

சற்று முன்