நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இப்போதும் அவர்தான் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக விளங்குகிறார். 75 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் மட்டும்தான். இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர் நடிகர் தனுஷ். இருவருக்கும் யாத்ரா லிங்கா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2024ம் ஆண்டில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஐஸ்வர்யாவும் திரைப்பட இயக்குனராக உள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா லிங்காவுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அவர் அடிக்கடி செல்லும் ஆன்மிக தலங்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோவிலும் இருந்து வருகிறது. ஆனால் நேற்று தனது பிள்ளைகளுடன் அவர் சென்றது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகராக உள்ளார். ஒண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனராவும் தனுஷ் இருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என 4 படங்களை நடிகர் தனுஷ் சொந்தமாக டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை திரைப்பட கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார். அவரது சொந்த நிறுவனம் ஒண்டர்ஃபார் பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி படத்தின் இயக்குனரும் நடிகர் தனுஷ்தான். தனது மகன் யாத்ரா படத்தை தனுஷ்தான் இயக்குகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த பேரன் யாத்ராவும் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இனி தனது பேரன் நடிக்கும் படங்களின் விழாக்களிலும் தாத்தா என்கிற முறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்புள்ளது. மற்ற நடிகர்களின் படங்களுக்கே பிரமோசன் செய்யும் நடிகர் ரஜினிகாந்த் இனி தனது பேரனின் படங்களுக்கும் பிரமோசன் செய்ய அதிக வாய்ப்புள்ளது.





