- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்லாப்பெட்டி கூட்டணி ஜெயிக்காது… திமுகவை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க… - விசில் புரட்சிக்கு தமிழகம் தயாராகுது...

கல்லாப்பெட்டி கூட்டணி ஜெயிக்காது… திமுகவை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க… – விசில் புரட்சிக்கு தமிழகம் தயாராகுது – வேலூரில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வேலூரில் அகரம்சேரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று மதியம் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, அடங்காத காளையை புல்கட்டை காட்டி ஒரு சிறுவன் அடக்கினான். அந்த மாதிரி தேர்தல் களம் என்கிற முரட்டு மாட்டை அடக்க வேண்டும் என்றால் காளைக்கு என்ன வேணுமோ அதை கொடுக்க வேண்டும். பசியோடு இருந்த புல்கட்டை பார்த்தவுடன் மாடு சாப்பிட்டு அமைதியாகி விட்டது.

அதுபோல மக்களுக்கு எது தேவையோ என்ன பிரச்னையோ அதைதான் முதலில் செய்ய வேண்டும். அந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதுதான் முக்கியம். அதுதான் நம்ம டிவிகே கட்சி. மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததால் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை மக்கள் ஏமாந்து விட்டனர்.

- Advertisement -

உங்கள் எல்லோரையும் நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் பலவிதமான பிரச்னைகள் இடையூறுகள் உள்ளது. இதை ஒரு வாக்குறுதியாக தருகிறேன். தேர்தலுக்கு பின் தவெக ஆட்சி அமைந்த பிறகு உங்கள் எல்லோரையும் கிராமம் கிராமமாக வந்து என் சொந்தங்களை எல்லாம் நேரில் சந்திக்கிறேன். இது உறுதியாக நடக்கும்.

இந்த தேர்தலை பொருத்த வரை தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் எதிரான போர். தமிழக மக்களுக்கும் லஞ்சத்துக்கும் எதிரான போர். நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுகவுக்கும் மக்களுக்கும் எதிரான போர். திமுக ஆட்சிக்கும் மக்களுக்கும் எதிரான போர். சுருக்கமான சொன்னால் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர்தான் இந்த தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கின்றனர்.

- Advertisement -

இது சூப்பர் ஸ்டார் ஆட்சி என்கின்றனர். உண்மைதான். காமராஜர் ஆட்சியில் அண்ணா ஆட்சியில் எம்ஜிஆர் ஆட்சியில் தமிழகத்தில் நடந்தது சூப்பர் ஸ்டார் ஆட்சிதான். ஆனால் இந்த திராவிட மாடல் உல்டா ஆட்சியில் இது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடி ஆட்சியாக தான் இருக்கிறது. என்னை பற்றிய அவதூறுகளை பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புகிற மாதிரிதான். நீங்கள் எனக்கு எதிராக செய்கிற ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிரான செயல்தான்.

அறிவாலயம் வழியாக ரோட்டில் நடந்து போகிறவர்கள் நிழலுக்கு ஒதுங்கினால் கூட அவர்களை தேர்தல் கூட்டணியில் ஸ்டாலின் சேர்த்துக் கொள்கிறார். அவர்கள் அடித்து வைத்துள்ள கொள்ளையில் கொஞ்சம் கொடுத்து கூட்டணி வைக்கிறார். இதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என பெயர் வைத்திருக்கிறேன். இந்த ஆட்சியை வெளியேற்ற திமுகவை ஸ்விசிட் ஆஃப் செய்து விடுங்கள். ஈவிஎம் மெசினில் விசில் சின்னம் உள்ள பட்டனை பச்சக் பச்சக் பச்சக் என அழுத்துங்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் விசில் புரட்சிக்கு தயாராகி விட்டனர் என்று நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.

- Advertisement -

சற்று முன்