- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தி நடித்த வா வாத்தியார் படம் எப்படி இருக்கிறது? எம்ஜிஆர் கேரக்டரில் திரையுலக மார்கண்டேயனின் இளைய...

கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் எப்படி இருக்கிறது? எம்ஜிஆர் கேரக்டரில் திரையுலக மார்கண்டேயனின் இளைய மகன் ஜெயித்தாரா?

- Advertisement -

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு இன்று நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் திரைக்கு வந்துவிட்டது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கார்த்தியுடன் ராஜ்கிரண் சத்யராஜ் கிர்த்தி ஷெட்டி ஷில்பா மஞ்சுநாதன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் கதை இதுதான். எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண். எம்ஜிஆர் இறந்த சமயத்தில் பிறக்கும் தனது பேரனை எம்ஜிஆர் ரசிகராகவே அவர் வளர்க்கிறார். ஆனால் அந்த குழந்தையோ பணத்தாசை பிடித்த வில்லன் குணத்துடன் வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி கெட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு பணத்துக்காக சமூக விரோத வேலைகளை செய்கிறார்.

- Advertisement -

அவர் உடலுக்குள் எம்ஜிஆர் ஆன்மா புகுந்தால் என்ன நடக்கும் என்பதை பேண்டஸி கலந்த காமெடி கதையாக சொல்லும் படம் தான் வா வாத்தியார். ராமு என்கிற போது மோசமான போலீஸ்காரராகவும் எம்ஜிஆர் ஆன்மா புகுந்தால் ராமச்சந்திரன் என இரண்டு மாறுபட்ட வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கிறார். படத்தில் லாஜிக் மிஸ்டேக் ஏகப்பட்ட இடங்களில் வருகிறது. சில இடங்களில் கார்த்தி நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

எம்ஜிஆர் கெட்டப் மாறும் சண்டை காட்சிகளில் கார்த்தி கவருகிறார். கதாநாயகி கிர்த்தி ஷெட்டி பேயுடன் பேசும் கேரக்டரில் வருகிறார். பெரிய அளவில் ரசிகர்களை அவர் கவர்ந்த மாதிரி தெரிவதில்லை. அந்நியன் படம் மாதிரி 2 கேரக்டராக மாறும் நடிப்பும் கார்த்திக்கு செட்டாகவில்லை. கார்த்தியின் தாத்தாவாக எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் வருகிறார் அவர்தான் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக தெரிகிறார். எம்ஜிஆர் குறித்து அவர் பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

- Advertisement -

இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனந்தராஜ் கெட்டப்பும் ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரது கேரக்டர் குழப்பமாக உள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் படங்களில் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். ஆனால் இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் முழு ஆளுமையை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

படத்தின் கதை திரைக்கதையில் போதிய அழுத்தம் இல்லை. கதைக்களத்தில் இன்னும் அழுத்தமும் சுவாரசியமும் சேர்த்திருக்க வேண்டும். கார்த்தி ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இந்த படத்தை நிச்சயமாக எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இல்லை. கார்த்தி ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றமாக தான் இருக்கும். வா வாத்தியார் என்று அழைக்கும் அளவுக்கு இந்த படம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்