- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு அருமையான வாய்ப்பு… நான் மிஸ் பண்ணிட்டேன்… நடிகர் அஜீத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளர்...

அப்படி ஒரு அருமையான வாய்ப்பு… நான் மிஸ் பண்ணிட்டேன்… நடிகர் அஜீத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளர் டிடி!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி கமல் விஜய் அடுத்து நடிகர் அஜீத்குமார் உச்ச நட்த்திர நடிகராக இருந்து வருகிறார். ஆனால் அவரது பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஏனெனில் இதுவரை அஜீத்குமார் விஜய் இடையான வியாபார ரீதியான போட்டி இருந்தது. இனி அப்படி இருக்காது என்பதும் ஒரு முக்கிய காரணம்.

நடிகர் அஜீத்குமார் நடித்த படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜீத்குமாருக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தம்பி ராமையா மயில்சாமி சூரி கோவை சரளா உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

விஜய் டிவியில் பல ரியாலிடி ஷோக்களை தொகுத்து வழங்கி நடத்தி வருபவர் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. ஆனால் டிடி என்றுதான் அனைவராலும் இவர் அழைக்கப்படுகிறார். சினிமா விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் பங்கேற்கும் முக்கிய சினிமா விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக டிடி இருந்து வருகிறார்.

மேலும் பலமுறை நடிகர் நடிகைகளை டிடி நேர்காணல் செய்து இருக்கிறார். இவர் சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரதான தொகுப்பாளர்களில் ஒருவராக பல ஆண்டுகளாக டிடி இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த சகோதரிதான் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி என்பது பலரும் அறிந்த ஒன்றாகும்.

- Advertisement -

இந்நிலையில் டிடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அஜீத்குமாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது பேசிய டிடி கூறுகையில், நடிகர் அஜீத்குமார் நடித்த வேதாளம் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் என்னுடைய கெட்ட நேரம் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

கடந்த 10 வருஷமா இதை மனசுல வெச்சுட்டு இருக்கேன். ரொம்ப ஸாரி சார் என்று டிடி அதில் நடிகர் அஜீத்குமாரிடம் மன்னிப்பு கேட்டு வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த படத்தில் அஜீத்குமார் தங்கையாக லட்சுமி மேனன் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்