- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு பாய் பிரண்டே இல்லே… ஆனால் கர்ப்பமாகி விட்டேன் - ஜோசியர் சொன்னது நடந்தது -...

எனக்கு பாய் பிரண்டே இல்லே… ஆனால் கர்ப்பமாகி விட்டேன் – ஜோசியர் சொன்னது நடந்தது – ஓபனாக பேசிய நடிகை அமலா பால்!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் அவர் அறிமுகமானார். இதில் விதார்த் ஜோடியாக அவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது இயல்பான அழகும் நடிப்பும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தமிழில் அமலா பால் பல படங்களில் நடித்தார். தெய்வத் திருமகள் வேட்டை வேலையில்லா பட்டதாரி வேலையில்லா பட்டதாரி 2 ராட்சசன் அம்மா கணக்கு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மிகவும் வித்யாசமான கேரக்டரில் ஆடை என்ற படத்திலும் அவர் நடித்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அமலாபால் இந்த திருமணம் ஓராண்டுக்குள் விவாகரத்தில் முடிந்து விட்டது.

அதற்கு பிறகு படங்களில் தொடர்ந்து நடித்த வந்த அமலா பால் சில ஆண்டுகளில் ஜகத் என்ற கோவாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் கணவருடன் நெருக்கமான இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சமீபத்தில் தனது திருமணம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அமலாபால் கூறியதாவது, வாழ்க்கை ஒரு மாதிரி சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது ஜோசியர் ஒருவரை சந்தித்தேன்.அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். நான் என் மனதில், எனக்கு பாய் பிரண்டே இல்லை. இதெல்லாம் எப்படி நடக்கும்? சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் ஜோசியர் கூறிய கொஞ்ச நாட்களில் ஜகத்தை நான் கோவாவில் சந்தித்தேன். முதலில் டேட்டிங் செய்து பழகி வந்தோம். அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன். முதலில் நான் திருமணம் செய்கிற ஐடியாவில் இல்லை. ஆனால் கர்ப்பமான நிலையில் திருமணம் செய்துதானே ஆக வேண்டும். அப்படிதான் என் 2வது திருமணம் நடந்தது என்று அமலாபால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்