தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர் கூல் சுரேஷ். அவர் வருகிற காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக தான் இருக்கிறார். நடிகர் சிம்பு இயக்குனர் சிலம்பரசன் படங்களில் நடிகர் கூல் சுரேஷ் எப்படியும் சில காட்சிகளில் வந்து விடுவார். ஓரளவு ரசிகர்களுக்கு பரிச்சயமான காமெடி நடிகராக உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதே போல் சரக்கு என்ற மன்சூர் அலிகான் நடித்த பட விழாவில் பெண் தொகுப்பாளர் கழுத்தில் மாலையை போட்டும் சர்ச்சையில் சிக்கியவர் தான் கூல் சுரேஷ். புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அந்த பட ஹீரோவின் கெட்டப்பில் தியேட்டருக்கு வந்து அலப்பரை செய்வது இவரது வழக்கம்.
இயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகும் படம் மாஸ்டர் பிளான். இந்த படத்தில் தருண் விஜய் சாயாதேவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் காமெடி நடிகர் கூல்சுரேஷ் நடித்திருக்கிறார். எப்போதும் கலகலப்பாகவும் காமெடியாகவும் செய்தியாளர்கள் மத்தியில் பேசுபவர் நடிகர் கூல் சுரேஷ்.
ஆனால் இன் மாஸ்டர் பிளான் பட விழாவில் பங்கேற்ற போது நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவர் கூறியதாவது, நானும் இந்த படத்தின் இயக்குனர் ஹரி உத்ராவும் பல ஆண்டுகளாக நண்பர்கள். அடிக்கடி நாங்கள் பேசிக் கொள்வோம். நான் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கும் ஒரு நண்பர். அதனால் நீங்க என்ன சம்பளம் கொடுத்தாலும் என்ன கேரக்டர் கொடுத்தாலும் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
சினிமாவில் என்னை பப்ளிசிடிக்காக பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹரி உத்ரா மாதிரியான ஒரு சிலர்தான், உங்களிடம் திறமை இருக்கிறது. நீங்கள் பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொல்வார்கள். நான் கோமாளி அல்ல ஏமாளி என்று கூறிய கூல்சுரேஷ் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு அவர் கூறுகையில், நான் அழுவது உங்களுக்கு காமெடியாக தெரியலாம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நடிகர் விஜய் அழுதார்கள்.
சோசியல் மீடியாவில் இப்போது எல்லாமே நாடகமாக பார்க்கப்படுகிறது. அடுத்தவரின் வலியை புரிந்து கொள்ள வேண்டும்.நான் ஒரு குடும்பஸ்தன். என் குடும்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று எனக்கு மட்டும்தான் தெரியும். நான் அழுதாலும் விமர்சனம் செய்வார்கள். ஒரு மனிதன் என்ன தான் பண்ண முடியும் என்று மிகவும் பீலிங்காக அந்த நிகழ்ச்சியில் கூல்சுரேஷ் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





