- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மறைவு - அதிர்ச்சியில் உறைந்து போன தமிழ் சினிமா!

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மறைவு – அதிர்ச்சியில் உறைந்து போன தமிழ் சினிமா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவரது மகன் மனோஜ் பாரதிராஜா. கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து கடல் பூக்கள் சமுத்திரம் அல்லி அர்ஜூனா விருமன் மாநாடு வருஷமெல்லாம் வசந்தம் அன்னக்கொடி ஈரநிலம் பல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நடிகராக மனோஜ் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை. இதையடுத்து அவர் நடிகராக நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனராக முடிவு செய்தார்.

- Advertisement -

கடந்தாண்டில் மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தை அவரே முதன்முறையாக டைரக்ட் செய்தார். அந்த படத்தில் தனது அப்பா இயக்குனர் பாரதிராஜாவையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். பாரதிராஜாவும் கடந்த பல ஆண்டுகளாக இயக்குவதை விட்டுவிட்டு பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 48 வயதான நடிகர் மனோஜ், கடந்த சில மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

நடிகர் மனோஜ் நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்திடம் சில ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தனது மகன் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் அவரது தந்தை இயக்குனர் பாரதிராஜா அவரை தாஜ்மகால் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகராக ஜெயிக்க முடியவில்லை.

கடந்த 2006ம் ஆண்டில் நடிகை நந்தனா என்பவரை மனோஜ் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிப்பில் பெரிய இடத்தை அடைய முடியாவிட்டாலும் தன் தந்தையை போல இயக்குனராக ஜெயிக்க மனோஜ் ஆசைப்பட்டார். அவர் இயக்கிய மார்கழி திங்கள் படமும் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இந்த சூழலில் அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்