நடிகர் விஜய் என்றாலே தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மத்தியில் அவருக்கு இருக்கும் மாஸ் தான் முதலில் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு ரஜினிக்கு அடுத்தபடியாக ரசிகர்களிடம் பலத்த செல்வாக்கை பெற்றிருப்பவர் விஜய் என்றால் அது பொய்யல்ல. அதனால் தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற பஞ்சாயத்தே வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் விஜய் நடித்த பீஸ்ட் மாஸ்டர் வாரிசு லியோ தி கோட் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெரிய தோல்வி படங்களாக இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றிப் படங்களாக நல்ல லாபத்தை கொடுத்தன. இதற்கு காரணம் மொக்கை படமாக இருந்தாலும் அது விஜய் படம் என்கிற அந்த ஸ்டார் வேல்யூ மட்டுமே இதற்கு காரணம்.
அதனால் விஜய் நடித்த கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. கில்லி படத்துக்கு ரசிகர்கள் தந்த அமோக வரவேற்பை பார்த்துதான் ரஜினி கமல் அஜீத்குமார் போன்ற ஹீரோக்களின் பழைய ஹிட் படங்களும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரியாக ரி ரிலீஸ் செய்யப்பட்டன.
ஆனால் இப்போது விஜய் நடித்த சூப்பர் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக தெறி ரி ரிலீஸ் செய்யப்பட்டு மிக மோசமான ஒரு விளைவை சந்தித்து இருக்கிறது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத போது ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு முன்வந்தார். ஆனால் வா வாத்தியார் பராசக்தி டிடிடி ஆகிய படங்கள் வருகையால் இந்த படத்தை ஜனவரி 21க்கு தள்ளி வைத்தார்.
அப்போது இயக்குனர் மோகன்ஜியின் திரௌபதி 2 படம் வெளியாகிறது என்றதால் தேதி குறிப்பிடாமல் தெறி படத்தை மீண்டும் தாணு ஒத்தி வைத்தார். பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இந்த படத்தை தாணு ரி ரிலீஸ் செய்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் என்ற நிலையில் தாணு பெரிய எதிர்பார்ப்புடன் இந்த படத்தை ரி ரிலீஸ் செய்தார்.
ஆனால் அதே நாளில் நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததால் அது இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பேசி பொருளானது. இதனால் தெறி படம் பார்த்த ஆள் இல்லாமல் பல திரையரங்குகளில் காட்சிகள் நீக்கப்பட்டது. இதுவரை இந்த படம் தமிழகத்தில் 10 ஆயிரம் ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்னப்பா, விஜய் ரசிகர்கள் எல்லாம் வெளிநாடு போய் விட்டார்களா என்று நெட்டிசன்கள் இதுகுறித்து இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.





