நடிகர் விஜய் சங்கீதா குடும்ப விவகாரம் இப்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிவிட்டது. மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டுள்ள தவெக தலைவர் விஜய் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்த சூழலில் அவர் நேற்று நடிகை திரிஷாவுடன் திருமண விழா ஒன்றில் பங்கேற்றது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய செயலாக மாறியிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் வளரும் கலைஞராக இருந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் நடித்த விஷ்ணு படத்தை தயாரித்தவர் பாலாஜி பிரபு. தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்பட வினியோகஸ்தர்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் தமிழ் சினிமா நடிகர்கள் சார்ந்த பல விஷயங்களை தொடர்ந்து நேர்காணல்களில் பேசி வருகிறார்.
சமீபகாலமாக நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் அவரது நடவடிக்ககைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, நடிகர் விஜயின் மனைவி ஒரு தனியார் டிவி சேனலில் 2 மணி நேரம் பேசியிருக்கிறார். அவர் கொடுத்த அந்த 2 மணி நேர பேட்டி விரைவில் ஒளிபரப்பாக போகிறது. எனக்கு வந்த தகவலின்படி அந்த 2 மணி நேர பேட்டியை சங்கீதா கொடுத்து முடித்து விட்டார்.
விஜய் தரப்பில் இருந்து அந்த பேட்டியை வெளியே வரவிடாமல் தடுக்க சில முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. விஜய் பேர்ல இருக்கிற சொத்து எதையும் விற்க கூடாது. பினாமி பெயரில் எதையும் மாத்தக் கூடாது என்று கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் ஒன்றையும் சங்கீதா வாங்கப் போகிறார். இது எல்லாமே நடக்கப் போகிறது.
நடிகர் விஜய் ஒரு பெண்ணை தனது மனைவியை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்துவாரா? என்னதான் இருந்தாலும் அவங்க ஒரு பெண். அதை நாம் பார்க்க வேண்டும். தமிழகத்தில் இருக்கிற எல்லா பெண்களையும் அவர் நான் பாதுகாப்பேன் என்கிறார். தமிழ் மக்களுக்கு எல்லாம் நான் பாதுகாவலன் என்று சொல்கிறார். அப்படிப்பட்ட அவர் இன்னைக்கு அவரது மனைவியை காப்பாற்றவில்லை என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அதில் கூறியிருக்கிறார்.
தனது கணவர் நடிகர் விஜய் குறித்து சங்கீதா இந்த நேர்காணலில் பல்வேறு குடும்ப விஷயங்களை விஜய் தன்னிடமும் தன் பிள்ளைகளிடமும் அவரது பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோரிடமும் நடந்துக்கொண்ட விதம் குறித்தும் எல்லா தகவல்களையும் கொட்டியிருப்பதாக தெரிகிறது. இந்த நேர்காணல் மட்டும் ஒளிபரப்பானால் இன்னும் விஜய் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும் என்று திமுக பாஜக கட்சியினர் குஷியாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.





