- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் திமுகவுக்கு பயந்து அரசியலுக்கு வரவில்லை - தவெக ஆர்ப்பாட்டத்தில் எழுந்த விமர்சனத்தால் சூப்பர் ஸ்டார்...

ரஜினிகாந்த் திமுகவுக்கு பயந்து அரசியலுக்கு வரவில்லை – தவெக ஆர்ப்பாட்டத்தில் எழுந்த விமர்சனத்தால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவேசம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் போதைப்பொருட்களை தடுக்கவும் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

- Advertisement -

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜேடிசி பிரபாகரன் விஎஸ் பாபு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசியதாவது, எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வர முயன்றார். சிஸ்டம் சரியில்லை அதை மாற்ற வேண்டும் என்றார். ஆனால் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அவர் அரசியலுக்கு வரவில்லை. இப்போது ரெட் ஜெயிண்ட் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து திமுகவுக்கு எதிராக தலைவர் விஜய் நிற்கிறார். ஏனென்றால் விஜய்க்கு மனவலிமை அதிகம். ரஜினி குறித்து நான் விமர்சனமாக சொல்லவில்லை. தலைவர் விஜயின் மனவலிமையை பற்றி குறிப்பிட்டு இதைச் சொல்கிறேன் என்று ஆதவ் அர்ஜூன் பேசியிருந்தார். இது தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்ப்பை கண்டனத்தை கிளப்பியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தும் விஜய்க்கும் ஏற்கனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் பெரிய பஞ்சாயத்து வெடித்தது. இதில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையும் இன்னும் புகைச்சலை அதிகரிக்க செய்தது. ரஜினி விஜய் இடையே இதனால் பெரிய பகை மூண்ட நிலையில் ஒரு கட்டத்துக்கு பிறகு இரு தரப்பும் அமைதியாக உள்ளனர். இதில் இன்று தவெக கட்சியின் மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூன் ரஜினி குறித்து பேசி பிரச்னையை கிளப்பி விட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்