- Advertisement -
Homeபொழுதுபோக்குஅக்காவை நம்பி கூடப்போனது பெரிய தப்பாகி விட்டது… நாள் முழுவதும் நான் அழுதேன் - நடிகை...

அக்காவை நம்பி கூடப்போனது பெரிய தப்பாகி விட்டது… நாள் முழுவதும் நான் அழுதேன் – நடிகை ராதிகா குறித்து பேசிய அவரது தங்கை நடிகை நிரோஷா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் நடிகை ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான அவர் இப்போது வெளியான தாய்கிழவி படம் வரை ரசிகர்களின் பாராட்டை பெற்ற ஒரு சீனியர் நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை ராதிகாவின் சகோதரி நடிகை நிரோஷா. செந்தூரப்பூவே இணைந்த கைகள் பாண்டி நாட்டு தங்கம் லால் சலாம் பிரியமான தோழி என பல படங்களில் நிரோஷா நடித்திருக்கிறார். நடிகர் ராம்கியை காதலித்து நிரோஷா திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராம்கி கடந்த 1980களில் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகை நிரோஷா சினிமாவில் மட்டுமின்றி சன் டிவியில் சின்னபாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் ஸ்ரீப்பிரியா மற்றும் நளினி போன்றவர்களுடன் காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த காமெடி சீரியல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் பட்டாபி கேரக்டரில் நடித்த எம்எஸ் பாஸ்கர் இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நிரோஷா கூறியதாவது, ஒருமுறை ராதிகா அக்கா வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தார். அப்போது அக்கா வெளியே எங்கேயோ போகிறார் என்பதை தெரிந்துகொண்டு நானும் அவருடன் வருகிறேன் என்று சொன்னேன். சரி வா என்று என்னையும் அவருடன் கூட்டிகிட்டு போனார்.

- Advertisement -

அங்கு ஒரு நகைக்கடையில் ஒரு பெண்ணுக்கு மூக்கு குத்திக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண்ணுக்கு மூக்கு குத்தி முடிந்ததும் எங்க அக்காவை அந்த கடைக்காரர், வாங்க மேடம் நீங்கதான் அடுத்தது என்று சொன்னார். அப்போது அக்கா, முதலில் என் தங்கைக்கு மூக்கு குத்துங்கள். பிறகு நான் குத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் எனக்கு மூக்கு குத்துற ஐடியாவே இல்லை. நானும் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அக்கா கேட்கவில்லை. பிறகு எனக்கு மூக்கு குத்திய போது வலியால் நான் பட்ட வேதனையை பார்த்து என் அக்கா மூக்கு குத்தாமல் வீட்டுக்கு என்னை அழைத்து வந்து விட்டார். என்னால் வலி தாங்க முடியாமல் நான் நாள் முழுவதும் அழுதேன் என்று நடிகை நிரோஷா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்