- Advertisement -
Homeபொழுதுபோக்குமனவலிமை இல்லாதவரா ரஜினிகாந்த்? தவெக விமர்சனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - களத்தில் குதித்த அரசியல் தலைவர்கள்,...

மனவலிமை இல்லாதவரா ரஜினிகாந்த்? தவெக விமர்சனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு – களத்தில் குதித்த அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

சென்னையில் சமீபத்தில் தவெக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தலைமை நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து மனவலிமை இல்லாதவர் திமுக மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வரவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அன்பு சகோதரர் ரஜினிகாந்த் குறித்து தவெக கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துக்களை பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த். புரட்சித்தலைவரின் அன்பையும் புரட்சித்தலைவி அம்மாவின் நன்மதிப்பையும் பெற்றவர்.

- Advertisement -

அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனி மனிதரின் உரிமையோ அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி அவதூறு கருத்துக்களை பேசுவது என்பது அரசியல் நாகரீகம் அற்ற செயல் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் உலகளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். ரஜினி குறித்து ஆதவ் அர்ஜூனாவின் கருத்து ஏற்புடையதல்ல என்று ஜிகே வாசன் கூறியிருக்கிறார். பாஜக அமைச்சர் எல் முருகன் கூறுகையில், சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அனைத்து தரப்பு மக்கள் மீதும் தீராத அன்பு கொண்ட ரஜினிகாந்த் தவறை சுட்டிக்காட்ட என்றுமே தயங்கியதில்லை என்று எல் முருகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ரஜினிகாந்த் தன்னுடைய கலைப்பயணத்தில் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றைக் கடந்து 50 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவது அல்ல. அதற்கு மிகுந்த மன வலிமை வாய்த்திருக்க வேண்டும். அத்தகைய மனிதரின் மனவலிமை குறித்து தனக்கென தனி அடையாளம் இல்லாமல் மாமனாரின் பணத்தை வைத்து பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதை இல்யூஷன் என்று கூறலாம் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, சிறந்த பண்பாளரான ரஜினியை பொதுவெளியில் ஆதவ் அர்ஜூனா தவறாக பேசுவது ஏற்புடையதல்ல. அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு ஆதரவாக களத்தில் குதித்து இருக்கின்றனர். மேலும் ரஜினி ரசிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக கணக்கை வருகிற தேர்தலில் முடித்து வைப்போம் என்று ஆவேசமாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்