- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் அப்படி ஒரு கெட்ட வார்த்தையை நான் பேசிவிட்டேன் - ஓபனாக பேசிய நடிகர்...

அந்த படத்தில் அப்படி ஒரு கெட்ட வார்த்தையை நான் பேசிவிட்டேன் – ஓபனாக பேசிய நடிகர் எம்எஸ் பாஸ்கர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் எம்எஸ் பாஸ்கர். ஆரம்பத்தில் பல படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணி செய்தவர். பிறகு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து தமிழில் படங்களில் நடித்து எம்எஸ் பாஸ்கர் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆரம்பத்தில் அவர் சில படங்களில் குடிகார ஆசாமி கேரக்டரில் நடித்தார். பிறகு பல படங்களில் சந்தானம் வடிவேலு போன்றவர்களுடன் காமெடி ரோலில் எம்எஸ் பாஸ்கர் நடித்தார். சிவாஜி தசாவதாரம் போன்ற படங்களில் ரஜினி கமல் ஆகியோருடன் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பார்க்கிங் படத்தில் சிறந்த வில்லன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் எம்எஸ் பாஸ்கர் மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு அதிக கவனம் பெற்றது. இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் ஆதிவாசி மக்களின் தலைவராக அவரது நடிப்பு வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பு கலைஞர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் நடிகர் எம்எஸ் பாஸ்கரும் ஒருவர். தொடர்ந்து அழுத்தமான குணச்சித்திர வேடங்களை அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். சபாபதி பிரிவோம் சந்திப்போம் என பல படங்களில் எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறந்த நடிப்பை எம்எஸ் பாஸ்கர் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, சினிமாவில் நான் சில விஷயங்களை கடைப்பிடிக்கிறேன். அது என்னவென்றால் இரட்டை அர்த்த வசனங்களை நான் பேசி நடிக்க மாட்டேன். அதேபோல் பிற மதங்களை அவதூறாக பேசுவதும் கடவுள் இல்லை என்றும் பேச மாட்டேன்.

ஒருமுறை ஒரு படத்தில் புறம்போக்கு என்ற கெட்ட வார்த்தையை பேசினேன். சாதாரண வார்த்தையான அதை கெட்ட வார்த்தையாக மாற்றி விட்டோம். ஒரு நாள் சிறுவன் ஒருவரை இன்னொருவர் அந்த வார்த்தையை சொல்லி திட்டுவதை பார்த்தேன். அப்போது இருந்து கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்று முடிவு செய்தேன். இன்றுவரை அதை கடைபிடித்து வருகிறேன் என்று நடிகர் எம் எஸ் பாஸ்கர் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்