நடிகர் சிம்பு கடைசியாக நடித்த படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல் திரிஷா நடித்த இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் சிம்புவும் நடித்திருந்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் அரசன் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சிம்பு பிரியங்கா மோகன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கருப்பு படத்தின் நாயகன் நடிகர் சூர்யா நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய கிப்ட் ஒன்றை அனுப்பி தனது மகிழ்ச்சியை வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அதற்கு காரணம் கருப்பு படத்தில் வரும் முதல் பாடலை பாடியிருப்பது நடிகர் சிம்புதான். அவர்தான் அந்த பாடலை மிக அட்டகாசமாக பாடித் தந்திருக்கிறார்.
நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுன்றி பாடல்களை சிறப்பாக பாடும் ஒரு தேர்ந்த பாடகராகவும் இருந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இமேஜூம் பார்க்காமல் பாடி தந்து விடுவார். அது புதுமுக ஹீரோக்கள் படமாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் யோசிக்கவே மாட்டார்.
கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் சிம்புவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அதனால் சாய் அபயங்கர் அழைத்தவுடன் கருப்பு படத்துக்கான ஒரு பாடலை அவரது இசையில் பாடியிருக்கிறார். தொழில்நுட்பத்தில் குரலில் சிறு மாற்றம் செய்து இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடலை கேட்டவுடன் நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அசந்து போய்விட்டனர்.
ஆனால் இந்த பாடலை பாடுவதற்கு நடிகர் சிம்பு எதுவும் சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதனால் உடனடியாக நடிகர் சூர்யா மிகப்பெரிய விலை உயர்ந்த ஒரு பரிசை வாங்கி நடிகர் சிம்புவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சிம்பு பாடிய அந்த பாடல் படத்துக்கு மிகப்பெரிய வைப் தந்திருப்பதாக கூறப்படுகிறது.





