- Advertisement -
Homeபொழுதுபோக்குபூவே உனக்காக படத்தில் விஜய் நடித்தது எப்படி? அந்த ஹீரோவின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா எஸ்ஏ...

பூவே உனக்காக படத்தில் விஜய் நடித்தது எப்படி? அந்த ஹீரோவின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா எஸ்ஏ சந்திரசேகர்? – திடீரென எழும்பிய புதிய குற்றச்சாட்டு!

- Advertisement -

நடிகர் விஜய்க்கு அவர் ஆரம்பத்தில் நடித்த நாளை தீர்ப்பு தேவா ரசிகன் விஷ்ணு போன்ற படங்கள் பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தரவில்லை. பிறகு செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துடன் நடித்த போதுதான் விஜய்க்கு ஒரு அடையாளமும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அறிமுகமும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 1996ம் ஆண்டில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான பூவே உனக்காக படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். இந்த படத்தில் சங்கீதா அஞ்சு அரவிந்த் சார்லி மதன்பாபு எம்என் நம்பியார் நாகேஷ் மலேசியா வாசுதேவன் ஜெய் கணேஷ் மீசை முருகேஷ் என பலரும் நடித்தனர்.

நடிகர் விஜயின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் பூவே உனக்காக. இந்த படம்தான் அவரை ஒரு ஹீரோவாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள வைத்தது. இந்த படம்தான் அவருக்கு நிறைய ரசிகைகளை தேடித் தந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகுதான் விஜயின் சினிமா பயணம் ஆரம்பித்தது.

இந்நிலையில் பூவே உனக்காக படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது அப்போது முன்னணி ஹீரோவாக டாப் நடிகராக இருந்த நடிகர் பிரசாந்த் தான். அவர் நடிக்க வேண்டிய படத்தை விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தட்டிப் பறித்து விட்டார் என்று அந்த காலகட்டத்தில் விஜய்க்கு மேனேஜராக இருந்த பிடி செல்வக்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பிடி செல்வக்குமார் கூறியதாவது, பூவே உனக்காக படத்தின் கதை குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் போனில் பேசும்போது கூறியிருக்கிறார். உடனே அவரை நேரில் போய் சந்தித்த எஸ்ஏ சந்திரசேகர், சம்பளம் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். உங்கள் கம்பெனியில் என் பையன் நடிக்க வேண்டும் என்று ஆர்பி செளத்ரியிடம் பேசி சம்மதம் வாங்கினார்.

அதனால் நடிகர் பிரசாந்த் பெயரில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த செக்கை எல்லாம் கிழித்து எறிந்துவிட்டு இந்த படத்தில் நடிகர் விஜய் புக் செய்யப்பட்டார். அப்படி பிரசாந்த் நடிக்க வேண்டிய படத்தை தட்டிப் பறித்து விஜயை அதில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்க வைத்தார் என்று பிடி செல்வக்குமார் கூறிய குற்றச்சாட்டு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்