- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம ஒண்ணும் ஆகாயத்துல இருந்து குதிச்சு வரலே, எல்லாமே சாதாரண மனுஷங்க தான் - நடிகர்...

நாம ஒண்ணும் ஆகாயத்துல இருந்து குதிச்சு வரலே, எல்லாமே சாதாரண மனுஷங்க தான் – நடிகர் விஜயகாந்த் கூறியதை கேட்டு கண் கலங்கிய பிரபல வில்லன் நடிகர்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். ஆரம்பத்தில் சில படங்களில் அடியாளாக நடித்த அவரை என் தங்கச்சி படத்தில் ஒரு முக்கிய வில்லனாக காட்டியவர் இயக்குனர் பி வாசு. பிறகு வேலை கிடைச்சிடுச்சு படத்திலும் மெயின் வில்லனாக ஆனந்தராஜ் நடித்திருப்பார்.

அதன்பிறகு ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் பிரபு கார்த்திக் அர்ஜூன் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ஆனந்தராஜ். குறிப்பாக பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் கேரக்டரில் ஆனந்தராஜ் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினியே சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அப்பா அண்ணன் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களிலும் சிறந்த நடிப்பை தந்து வருபவர் ஆனந்தராஜ். சமீபகாலமாக ஹீரோக்களின் அப்பா கேரக்டரிலும் நடிகர் ஆனந்தராஜ் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் புகைப்பழக்கம் மதுப்பழக்கம் என தீய பழக்கங்கள் எதுவுமே இல்லாத சில நடிகர்களில் ஆனந்தராஜூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ் கூறியதாவது, நானும் விஜயகாந்த் சாரும் அசோக் நகர்ல ஒரு படத்தோட சூட்டிங் முடிச்சுட்டு ரோட்டுல ஓரமாக சேர் போட்டு உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். அப்போது ஷூட்டிங் பார்க்க ரொம்ப பேர் வந்தாங்க. அப்போது ஒருத்தர் பைக்குல வேகமாக வந்து தள்ளு தள்ளு என்று சொல்லிட்டு போனார்.

- Advertisement -

அப்போது, ரோடு முழுக்க இப்படி ஷூட்டிங் என்கிற பேரில் டிராபிக் இடைஞ்சல் பண்ணிணா மத்தவங்க எப்படி போறதுன்னு திட்டீட்டே போனார். அப்புறம் நாங்க உட்கார்ந்திருக்கிறதை பார்த்தும் கண்டுக்காமல் அவர் பாட்டுக்கு போயிட்டே இருந்தார்.

அப்போதுதான் விஜயகாந்த் சார் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார். சினிமா பார்க்காதவங்களுக்கு நாம சாதாரண மனிதர்கள். சினிமா பிடிக்காதவர்கருக்கு நாம ரொம்பவும் சாதாரண மனிதர்கள். நாம ஒண்ணும் ஆகாயத்தில் இருந்து குதிச்சு வரலே. இது ஆண்டவன் கொடுத்த பிச்சை என்றார். அன்னைக்கு என்னோட கண்ணை திறந்தது கேப்டன் விஜயகாந்த் தான் என்று ஆனந்தராஜ் அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்