- Advertisement -
Homeபொழுதுபோக்குபவள விழா பாப்பா, இந்த ஆட்டமெல்லாம் வருகிற 21ம் தேதி வரைதான் - திமுகவை வீட்டுக்கு...

பவள விழா பாப்பா, இந்த ஆட்டமெல்லாம் வருகிற 21ம் தேதி வரைதான் – திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களங்களில் அனல் பறக்கிறது. கட்சி தலைவர்கள் கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். ஆனால் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டங்கள் ரோடு ஷோ போன்றவை அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருகிறது.

- Advertisement -

கடைசி நேரத்தில் தவெகவின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.

பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்… நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தவெகவிற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

தவெகவின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.

Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே…இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம் என்று தவெக தலைவர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்