- Advertisement -
Homeபொழுதுபோக்குகென் கருணாஸ் திமிர் பிடித்தவன், யார் சொல்லியும் அதை கேட்கவில்லை - விளாசித் தள்ளிய இயக்குனர்...

கென் கருணாஸ் திமிர் பிடித்தவன், யார் சொல்லியும் அதை கேட்கவில்லை – விளாசித் தள்ளிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்த படம் யூத். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் கருப்பு படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் கென் கருணாஸ் குறித்து விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, நான் சொர்க்கவாசல் படம் சூட்டிங்கில் இருந்தேன். அப்போது கருணாஸை பார்க்க அவரது மகன் கென் கருணாஸ் வந்திருந்தான். என்னுடன் 2 நாட்கள் தங்கி இருந்தான். அப்போது பெரிய பெரிய இயக்குனர்களின் பெயர்களைச் சொல்லி பெரிய பெரிய நடிகர்களின் பெயர்களை சொல்லி அவர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

- Advertisement -

பிறகு 2 நாள் கழித்து புறப்படும் போது கென் கருணாஸிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். நீ சொன்ன பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் உன்னுடன் படம் பண்ணுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டாலோ அல்லது படம் பண்ண மாட்டேன் என்று அவர்கள் சொல்லிவிட்டாலோ என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை. உடனே என்ன செய்வது என்று என்னிடமே திருப்பி கேட்டான். அதற்கு நான் சொன்ன பதில், உனக்கு நீயே ஒரு படம் செய்து கொள் என்று சொன்னேன்.

அதற்குப் பின்னர் கென் கருணாஸை நான் பார்க்கவில்லை. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு கென் கருணாஸ் எனக்கு போன் செய்து என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினான். நானும் உடனே ஆபீசுக்கு வா என்று சொன்னேன். ஆபீஸ்க்கு வந்தவன் யூத் படத்தின் கதையை என்னிடம் சொன்னான். அந்த படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு அந்த படம் ஹிட் என்று நம்பினேன். ஆனால் நான் இதுவரை யூத் படம் பார்க்கவில்லை.

- Advertisement -

கதையை கேட்டதும் அப்படி நம்பிக்கை வர காரணம் அந்த கதையை சொல்லும்போது 10 கதாபாத்திரங்களையும் கென் கருணாஸ் நடித்துக் காட்டினான். மேலும் அந்தக் கதையை அவன் அவனுக்காக சிறப்பாக செய்து கொண்டான் என்பதுதான். கதை ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு சில தயாரிப்பாளர்களும் கதையை சொல்லச் சொன்னேன். அந்த தயாரிப்பாளர்களும் படம் செய்ய முன் வந்தார்கள்.

கதை நன்றாக இருக்கிறது. படத்தை நானே தயாரிக்கிறேன் என்று வந்த தயாரிப்பாளர்களை எல்லாம் கென் கருணாஸ் நிராகரித்து விட்டான். முதல் படத்திற்கு தயாரிப்பாளர்களே தேடி வந்தும் இவன் வேண்டாம் என்கிறானே? கொஞ்சம் திமிர் பிடித்தவன் தான் போல என்று நான் நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் சரியான தயாரிப்பாளிடம் சென்று மிகவும் அழகாக அந்த படத்தை எடுத்து முடித்து விட்டான். கென் கருணாஸ் எடுத்த முடிவுதான் சரி என்று அந்த நேர்காணலில் ஆர்ஜே பாலாஜி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்