- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 24ம் தேதி தேர்தலுக்கு மறுநாள் வெளியாகும் திரைப்படங்கள் - அட வேற லெவல்தான் போங்க...

வருகிற 24ம் தேதி தேர்தலுக்கு மறுநாள் வெளியாகும் திரைப்படங்கள் – அட வேற லெவல்தான் போங்க என ஆச்சரியப்படும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி தமிழக தேர்தல் களத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு மறுநாள் 24ம் தேதி தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. குறிப்பாக அஜீத்குமார் ஷாலினி நடித்த அமர்க்களம் படம் வருகிற 24ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. அவர்களது திருமண நாளில் இந்த படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடித்த போதுதான் இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல் நடிகர் விஜய் அசின் நடித்த படம் சிவகாசி. இயக்குனர் பேரரசு இயக்கிய இந்த படம் விஜய் நடித்த படங்களில் பிளாக்பஸ்டர் படமாகும். இதில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே விஜய்க்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. அனைத்து பாடல்களும் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகின்றன.

அத்துடன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 2 வேடங்களில் நடித்த மாட்டுக்கார வேலன் என்ற படமும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் ஜெயலலிதா லட்சுமி நாயகிகளாக நடித்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் நடித்த படங்களில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் என்பதால் இந்த படம் தேர்தலுக்கு மறுநாள் வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுதவிர நடிகர் மாதவன் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படமும் வருகிற 23ம் தேதி ரி ரிலீஸ் ஆகிறது. காதல் கதையில் உருவான இந்த படமும் பெரிய வெற்றி பெற்ற படமாகும். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படமும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படி தேர்தலுக்கு மறுநாள் பல ரி ரிலீஸ் படங்கள் திரைக்கு வருகின்றன.

மேலும் காந்தி கிருஷ்ணா இயக்கிய பிரேக் பாஸ்ட் என்ற படம் வருகிற 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. புதுமுக நடிகர்கள் நடிகைகள் நடித்த கமாண்டோவின் லவ் ஸ்டோரி என்ற படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் தீயோர் கூடம் பரவக்கூத்து பேட்டில் ஆகிய புதிய படங்களும் அன்று ரிலீஸ் ஆகின்றன.

- Advertisement -

சற்று முன்