தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு அவர் போட்டியிட்டுள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அந்தோணியார் சர்ச்சியில் நடிகர் விஜய் வழிபாட்டில் ஈடுபட்டார்.
அப்போது அவர் சர்ச்சில் மண்டியிட்டுக்கொண்டே நகர்ந்து நகர்ந்து நடந்து சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதன்பிறகு அங்குள்ள ஒரு அம்மன் கோவிலுக்கும் சென்ற விஜய் அங்கு நெடுசாண் கிடையாக நிலத்தில் படுத்து அம்மனை வழிபட்டார். மேலும் அங்குள்ள மசூதி ஒன்றிலும் விஜய் வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அந்தோணியார் சர்ச்சியில் மண்டியிடப்படி நடந்து சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டது குறித்து பலவிதமான சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஜோசப் விஜய் என்பதால் தான் அவர் சர்ச்சியில் அப்படி மண்டியிட்டு நடந்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டார் என்றும் விமர்சித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜயுடன் சில படங்களில் நடித்த ஸ்ரீமன் இதுகுறித்து பேசியிருக்கிறார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீமன். குறிப்பாக சேது படத்தில் விக்ரம் நண்பராக இவரது நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது. அதே போல் காஞ்சனா படத்திலும் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். மேலும் நடிகர் விஜய்க்கு நெருக்கமான நண்பர்களின் ஸ்ரீமனும் ஒருவர்.
நடிகர் விஜய் சர்ச்சில் பிரார்த்தனை செய்தது குறித்து நடிகர் ஸ்ரீமன் கூறியதாவது, எனக்கு விஜயை 30 வருடமாக தெரியும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும் அவர் கடவுளிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம். இது புதிய விஷயம் கிடையாது. தேர்தலுக்காக செய்வது இல்லை.
நான் திருவண்ணாமலை போய்விட்டு பிரசாதம் கொண்டு வந்தாலும் அவர் மரியாதையாக ஏற்றுக் கொண்டு நெற்றியில் விபூதி வைத்துக் கொள்வார். அவர் எல்லா மதத்தையும் மதிப்பவர். அதிலும் குறை கூறுவது தேவையா? என்று நடிகர் ஸ்ரீமன் கூறியிருக்கிறார். தனது படங்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்வது போலவே, தேர்தல் பிரசாரமும் தேர்தலில் வெற்றி பெறவும் விஜய் பிரார்த்தனை செய்தார் என்பதை ஸ்ரீமன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.





