- Advertisement -
Homeபொழுதுபோக்குலீடர் பட இயக்குருக்கு இப்படி ஒரு சம்பளமா? லெஜண்ட் அண்ணாச்சி செய்த தரமான சம்பவம் -...

லீடர் பட இயக்குருக்கு இப்படி ஒரு சம்பளமா? லெஜண்ட் அண்ணாச்சி செய்த தரமான சம்பவம் – ஆனா டைரக்டர் இந்த முறை அதை செய்வாரா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் காக்கிச்சட்டை நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் கொடி நடிகர் சூரி நடித்த கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் அருள் சரவணன் நடித்த லீடர் படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்ணாச்சி அருள் சரவணன் நடித்த முதல் படம் லெஜண்ட் சரியாக போகவில்லை. அதில் அவரது நடிப்பை பலரும் ட்ரோல் செய்து கலாய்த்தனர். ஆனால் லீடர் படத்தில் அவரது நடிப்பு பெரிய பாராட்டை பெற்றது. மேலும் இந்த படத்தில் தாடி மீசையுடன் ஒரு பாசக்கார அப்பாவாக ஆக்சன் ஹீரோவாக லெஜண்ட் அண்ணாச்சி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமார் தான் டைரக்ட் செய்கிறார். லீடர் படம் உருவான போதே இயக்குனரின் பக்குவப்பட்ட செயல்பாடுகளையும் ஒரு இயக்குனராக அவரது பணியையும் பார்த்து வியந்து போன லெஜண்ட் சரவணன் தனது 3வது படத்தை இயக்குவதும் நீங்கள்தான் என 1 கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்து கமிட் செய்து விட்டார்.

லீடர் படத்தை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு ரூ. 5 கோடி சம்பளம் தந்த லெஜண்ட் அண்ணாச்சி, தனது அடுத்த படத்தை இயக்க துரை செந்தில்குமாருக்கு பேசிய சம்பளம் ரூ. 10 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. முதல் படத்தின் சம்பளத்தை இரட்டிப்பாக்கி தந்த இயக்குனரை அப்படி அசந்து போக செய்துவிட்டார் லெஜண்ட் அண்ணாச்சி.

- Advertisement -

ஆனால் லீடர் படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெறவில்லை என்றாலும் லெஜண்ட் படத்தை காட்டிலும் இந்த படம் நல்ல கவனமும் அடையாளமும் ரசிகர்களிடம் பெற்றுள்ளது. ஒரு நல்ல நடிகராக ஹீரோவாக அதுவும் அதிரடி ஆக்சன் நாயகனாக லெஜண்ட் அண்ணாச்சி இந்த படத்தில் ஜெயித்திருக்கிறார். அதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் லீடர் படத்தில் மிகப்பெரிய குறையாக இருந்தது காமெடி காட்சிகள்தான். காமெடி நடிகர் டிவிடி கணேஷ் சில காட்சிகளில் வந்து செய்த காமெடி காட்சிகளும் எடுபடவில்லை. அதனால் லெஜண்ட் சரவணன் நடிக்கும் 3வது படத்தில் காமெடி காட்சிகளும் இருந்தால் படம் இன்னும் ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருக்கும். இதை இயக்குனர் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் காமெடி நடிகர்கள் இல்லாவிட்டால் தெலுங்கு மலையாளம் என பிறமொழி காமெடி நடிகர்களை கூட கொண்டுவரலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்