- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் தான் அடுத்த முதல்வர் - முன்னாள் போலீஸ் உயரதிகாரியின் கருத்து கணிப்புக்கு கிண்டலாக பதிலளித்த...

விஜய் தான் அடுத்த முதல்வர் – முன்னாள் போலீஸ் உயரதிகாரியின் கருத்து கணிப்புக்கு கிண்டலாக பதிலளித்த பிரபல நடிகை!

- Advertisement -

நாளை மறுதினம் மே 4ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் பரபரப்பான அரசியல் சூழலில் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் இருந்து இந்த முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. வழக்கத்துக்கு மாறாக இந்த முறை தேர்தல் முடிவுகள் குறித்து அதிக பரபரப்பும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்த முறை திமுக அல்லது அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளை கடந்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் களத்தில் இருப்பதுதான். அவருக்கு மக்கள் தந்த ஆரவாரமான வரவேற்பும் எழுச்சியும் இந்த தேர்தல் அவர் ஜெயித்து முதலமைச்சர் ஆகி விடுவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மூலம் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.

அவரது தமிழக வெற்றிக்கழகம் 41 சதவீதம் வாக்குகளை பெறும். ஒரு தொகுதிக்கு 10 ஓய்வு பெற்ற காவலர்கள் என்ற கணக்கில் தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் மொத்தம் 2.34 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து கேட்டதன் முடிவுகள் தான் இவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செக்சனில் அவரே, இது அனைத்தும் சர்வே செய்து வந்த தனிப்பட்ட கருத்துக்கணிப்பு. கமெண்ட் செக்சனில் யாரும் குஜிலிமஸ்து போட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்டிற்கு நடிகை வினோதினி வைத்யநாதன் கிண்டலாக ஒரு பதிவை செய்துள்ளார்.

அதில், முதலமைச்சர் விஜய் அண்ணாவின் சிறப்பான ஆட்சியின் கீழ் தமிழ்நாடு வரும் ஆண்டுகளில் இருப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். மே 7ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அணிந்து கொள்ள வெள்ளை நிறச் சட்டையும் வெளிர் காக்கி நிற பேண்டும் ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த நக்கலான போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

சற்று முன்