இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சேரன். பிறகு பாரதி கண்ணம்மா படம் மூலம் அவரே இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம் வெற்றிக் கொடி கட்டு ஆட்டோகிராப் பொக்கிஷம் பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து என பல படங்களை இயக்கினார்.
அவர் இயக்கிய சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். தவிர பிற இயக்குனர்களின் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களிலும் சேரன் ஹீரோவாக நடித்தார். இயக்குனர் நடிகர் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது மார்கெட் சரிந்து போய்விட்டது.
இதற்கிடையே விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சேரன் கலந்துக்கொண்டார். மேலும் சமீபகாலமாக சில படங்களில் சேரன் நடித்து வருகிறது. அவர் சேரனின் ஜர்னி என்ற வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கி இருந்தார். சேரன் சுகன்யா எம்எஸ் பாஸ்கர் தம்பி ராமையா உமாபதி நடித்த திருமணம் என்ற படத்தையும் சேரன் இயக்கி இருந்தார்.
இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இப்போது தமிழக முதல்வராகும் சூழலில் விஜய் இருக்கிறார். இப்போது இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சந்தித்த முதல் தேர்தலில் தேர்தலிலேயே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டின் வீசும் சுதந்திர காற்று தான். எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியிலிருந்து விலக்கி எண்ணையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே உங்கள் நோக்கமும் ஆக இருந்தது என்பதை உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித் தரும் என நம்புகிறேன்.
தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் விஜய் திருச்செந்தூரில் கையில் வேலுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் புகைப்படத்தையும் சேரன் அந்த பதிவில் இணைத்து பதிவிட்டு இருக்கிறார். இப்படி அந்தர் பல்டி அடித்துவிட்டாரே என்று இயக்குனர் சேரனை தளபதி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





