- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை யாருமே கண்டுக்லே, என் பெயரை யாருமே சொல்லலே, என் ஈகோ அன்றே நொறுங்கி விட்டது...

என்னை யாருமே கண்டுக்லே, என் பெயரை யாருமே சொல்லலே, என் ஈகோ அன்றே நொறுங்கி விட்டது – நடிகர் ரஜினிகாந்த் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

பெங்களூருவில் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி நடத்தி வரும் வாழும் கலை ஆசிரமம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பங்கேற்றார். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, வாழும் கலையை துவங்கி 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் முடிந்தால் கலந்துக்கொள்ளுங்கள் என்று குருஜி ரவிசங்கர்ஜி கூறி இருந்தார்.

உங்களுக்கு சூட்டிங் இல்லை என்றால் மட்டும் வாங்க என்றும் குருஜி கூறியிருந்தார். நான் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு சென்றதால் கன்னடத்தில் பேச வாய்ப்பில்லை. பேசவும் வராது. அதே சமயம் மறக்கவும் இல்லை.

- Advertisement -

நான் முதன் முதலாக இந்த ஆசிரமத்துக்கு வந்த போது அதன் அழகைப் பார்த்து அசந்து விட்டேன். இங்கிருக்கும் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். இங்கே இரண்டு குதிரைகள் இருக்கிறது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி. இரண்டு நாட்கள் தங்கலாம் என்று வந்து 15 நாட்கள் இங்கு இருந்தேன்.

ஒருநாள் மாலை குருஜி வந்து, இன்று நல்ல நாள். அதனால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருக்கிறார்கள். நான் அவர்களை சந்திக்க போகிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள் என்றார். நான் வந்தால் அது தொந்தரவாக இருக்கும் என்று மறுத்தேன். அதெல்லாம் தொந்தரவு வராது. நீங்கள் வாங்க என்று அவர் என்னை அழைத்தார். நான் அவருடன் செல்லும்போது என்னை பார்த்தால் எல்லோரும் ரஜினி ரஜினி என்று கோஷமிடுவார்கள். ஆட்டோகிராஃப் கேட்பார்கள் போட்டோ எடுப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

- Advertisement -

ஆனால் நடந்ததே வேறு. நானும் குருதேவும் ஒரு இடத்தில் அமர அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றார்கள். ஆனால் ஒருவர் கூட என்னை பார்க்கவில்லை. போட்டோ ஆட்டோகிராஃபை விடுங்கள். நான் பலரைப் பார்த்து கையை காட்டியும் யாரும் என்னை கண்டுக்கவே இல்லை. இது என் ஈகோவை நொறுக்கி விட்டது.

உங்களுக்கு தொந்தரவு வரவில்லையே என்று குருஜி கேட்டார். அதுதான் ஆன்மீகத்தின் பவர். புகழ்ச்சி வரும் போகும். ஆனால் ஆன்மீக புகழ் தான் என்றும் உயர்ந்தது. அவர்கள் இறந்தாலும் கூட அந்த ஆன்மீக புகழ் அப்படியே இருக்கும். சொல்லப்போனால் இன்னும் புகழ் அதிகரிக்கும். நல்ல குரு கிடைப்பது கஷ்டம். எனக்கு அருமையான குருவாக ஸ்ரீ ஸ்ரீ குருஜி கிடைத்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்