- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி தரம் கெட்டு நடப்பவன் நான் இல்லை, விஜய் வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம் தான்...

அப்படி தரம் கெட்டு நடப்பவன் நான் இல்லை, விஜய் வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம் தான் – நடிகர் ரஜினிகாந்த் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் திமுக அதிமுக கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நடிகர் ரஜினிகாந்த் முயன்றதாக தகவல் பரவியது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் எனக்கு 38 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்.

- Advertisement -

எங்களின் நட்பு கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால் விஜய் முதல்வர் ஆகாமல் தடுக்க இரண்டு பெரிய கட்சிகளை இணைக்க நான் முயன்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்படி தரம் கெட்டு நடப்பவன் இந்த ரஜினிகாந்த் இல்லை.

தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதும் என்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் நான் வாழ்த்துகளை சொல்லி இருக்கிறேன். சமீபத்தில் நான் விமான நிலையம் சென்றிருந்தபோது ஒருவர் விஜய் முதல்வரானது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் பத்திரிகையாளர் போலவே தெரியவில்லை. ஒரு மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டே என்னிடம் கேள்வி கேட்டார்.

- Advertisement -

அதனால் நான் பதில் சொல்லாமல் சென்று விட்டேன். அதையும் நான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம் வந்தது. அடுத்ததாக விஜய் முதல்வரானது குறித்து எனக்கு பொறாமை என்றெல்லாம் பேசினர். நான் அரசியலிலேயே இல்லை. பிறகு ஏன் விஜய் முதல்வர் ஆவதற்கு நான் பொறாமைப்பட வேண்டும்?

ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் பொறாமை வந்திருக்குமோ? ஆனால் அப்போதும் எனக்கு பொறாமை வராது. எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டு தலைமுறை வேறுபாடு உள்ளது. அவர் முதல்வராக ஆவதற்கு எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? இந்த வயதில் சினிமாவில் இருந்து ஒருவர் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றது ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே எனக்கு கொடுத்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

- Advertisement -

சற்று முன்