- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி 2 பட நாயகி கங்கனா ரெனாவத்துக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதா? - இணையத்தில்...

சந்திரமுகி 2 பட நாயகி கங்கனா ரெனாவத்துக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதா? – இணையத்தில் வைரலான தகவல் – அவரே தந்த அதிரடி விளக்கம்!

- Advertisement -

எப்போதுமே சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்கள் வேகமாக பரவி விடுகின்றன. குறிப்பாக அவர்களது காதல் திருமணம் கர்ப்பம் விவாகரத்து மற்றும் பிற நடிகர் நடிகைகளுடன் தொடர்பு அரசியல் ஆர்வம் போன்ற விஷயங்கள் வேகமாக வெளியாகி பரவுகின்றன. ஆனால் இதில் பெரும்பாலும் வதந்திகளே அதிகம்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரெனாவத். இவர் தமிழில் தலைவி சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை கங்கனா ரெனாவத் பாஜக எம்பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கங்கனா ரெனாவத் கழுத்தில் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

- Advertisement -

அதனால் அவருக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவியது. உண்மையிலேயே கங்கனா ரெனாவத் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா என்று ரசிகர்கள் மத்தியிலும் சந்தேகம் வலுத்தது. அவரது கணவர் சினிமா சார்ந்தவரா, அல்லது தொழிலதிபரா, அரசியல்வாதியா என்றும் ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

தற்போது இதுகுறித்து எம்பி கங்கனா ரெனாவத் தனது வலைதள பக்கத்தில் விளக்கம் தந்துள்ளார். அதில் கங்கனா கூறியிருப்பதாவது, நான் எப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும் அது ரகசியமாக இருக்காது. நான் ஒவ்வொரு நாளும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பில் இருக்கிறேன்.

- Advertisement -

யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை படப்பிடிப்பில் மேக்கப்புடன் நான் இருக்கும்போது எடுத்துள்ளார். இப்போது எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருமணமான பெண்ணின் தோற்றத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நடிகர்கள் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள்.

நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இது உறுதி என்று நடிகை கங்கனா ரெனாவத் கூறியிருக்கிறார். அவரது கைவசம் இப்போது பல படங்கள் உள்ளன. அதில் பாரத பாக்கிய விதாதா திரைப்படம் வருகிற ஜூன் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. தொடர்ந்து குயின் படத்தின் 2ம் பாகத்திலும் நடிகர் மாதவனுடன் இணைந்து அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்